காவல்துறையினருக்காக அரசிடம் கோரிக்கை விடுத்த நடிகர் கார்த்தி…

கோவை: காவல்துறையினரின் கஷ்டங்களை மேடையில் பகிர்ந்து கொண்ட நடிகர் கார்த்தி அரசுக்கு கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்

Advertisement

கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை பத்தாவது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிவக்குமார் கார்த்தி சக்தி மசாலா நிறுவனர் துரைசாமி சாந்தி துரைசாமி புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் ஐபிஎஸ் திவ்யா கோவை மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் அறக்கட்டளை துவங்கி என்ன செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தான காணொளி ஒளிபரப்பப்பட்டது நிகழ்ச்சியின் முடிவில் காவல்துறையினரின் பள்ளி கல்லூரி குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய கோவை மேற்கு மண்டல ஐஜி ரம்யபாரதி, இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்ததே பெருமையாக நினைப்பதாக தெரிவித்தார். நடிகர் சிவக்குமார் ஐயாவை சிறுவயதில் இருந்தே தெரியும் என்றும் சென்னையில் பக்கத்து வீட்டுக்காரர் தான் சூர்யா கார்த்தி இருவரும் தனது நெருங்கிய நண்பர்கள் என்று கூறினார்.

சக்தி மசாலா நிறுவனம் தொழிலைத் தாண்டி அந்த காலத்தில் இருந்தே சமூக சேவைகள் செய்து வருகிறார்கள் என்றும் கூறினார். மாணவிகள் நீங்கள் பெரிய இடத்திற்கு சென்றால் சமுதாயத்திற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்பது முக்கியம் என்றும் என்றென்றும் தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்று கூறினார்.

Advertisement

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஐபிஎஸ் திவ்யா மனதில் இருந்து பேச வேண்டும் என்றால் தாய்மொழி தவிர்த்து வேறு எந்த மொழியிலும் பேச முடியாது எனவே தமிழ் தெரியாதவர்கள் உங்கள் நண்பர்களிடம் கேட்டு நான் பேசியதை தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார். நான் கோவையை சேர்ந்தவள் என் தந்தையும் காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக ஓய்வு பெற்றவர் என்று கூறினார் நான் இங்கு நிற்பதற்கு காரணம் என்னுடைய குடும்பம் தான் என்றும் என்னுடைய அம்மா இல்லை என்றால் எங்கள் குடும்பமே இல்லை என்று கூறி சிவன் இல்லையில் சக்தி இல்லை என் அம்மா புஷ்பா இல்லையேல் எங்கள் குடும்பம் இல்லை என்று தெரிவித்தார்.

நடிகர் சிவகுமார் கார்த்தி அவர்களுக்காக யோசிக்காமல் மக்களுக்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்கள். என்றும் சக்தி மசாலா சமையலறையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்று தெரிவித்தார்.

Advertisement

பொது மக்களிடம் காவல்துறைக்கு நல்ல பெயர் கிடையாது என்றும் என் அப்பா இருக்கும் பொழுதும் அப்படிதான் இருந்தது நான் வந்த பிறகும் அப்படி தான் இருக்கிறது என்று கூறினார். இளம் பெண்கள் உங்களிடம் ஒரே ஒரு கோரிக்கைகளை வைத்துக் கொள்கிறேன் என்று கூறிய அவர் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் என்றும் எப்பொழுதும் Positive Mind set உடன் இரங்கல் நெகட்டிவாக இருந்தால் எதுவுமே செய்ய முடியாது ஆனால் தற்பொழுது உள்ள தலைமுறையினர் அப்படிதான் உள்ளார்கள் என்று கூறினார் மன அழுத்தம் என்பதையெல்லாம் தற்காலிகமானது தான் என்றும் மன வருத்தம் ஏதாவது இருந்தால் உடனடியாக உங்களது குடும்பத்தினர் நண்பர்கள் ஆசிரியர்களிடம் கூறுங்கள் என்று தெரிவித்தார்.

இந்தி தெரியாது போடா என்றுதான் நானும் இருந்தேன் ஆனால் வட மாநிலங்களில் காவல்துறை பணிக்கு செல்லும் பொழுது அதனை கற்றுக்கொண்டு முன்னேறியதாக சுட்டி காட்டினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் சிவகுமார் காவல்துறைக்காக கார்த்தி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த அறக்கட்டளை என்றும் தானம் செய்வதற்கு என்றே பிறந்த ஒரு பரம்பரை சக்தி மசாலா என்று தெரிவித்தார். மேலும் அவரது வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கையை பற்றி பேசிய அவர் நான் சிவகுமார் அறக்கட்டளையை துவக்கினேன், பிறகு எனது இரண்டு மகன்களும் அறக்கட்டளையை துவக்கி நடத்தி வருகிறார்கள். கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியும் என்று கூறி உரையை முடித்தார்

இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் கார்த்திக், இந்த அன்பிற்கு மிக்க நன்றி என்றும் நன்றி சொல்ல முடியாத அளவிற்கு அன்பு கொடுத்து உள்ளீர்கள் வந்தியதேவனாக கூற வேண்டும் என்றால் உயிர் உங்களுடையது என்று தெரிவித்தார்.

நான் பள்ளியில் படிக்கும் பொழுது சென்னையில் இருந்தாலும் கோவை பையன் தான் என்று கூறுவேன் என்றும் கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர் என்று தெரிவித்தார் சினிமாவில் ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று வந்த என்னை நீங்கள் கொடுத்த இடம் மிகப்பெரியது என்று தெரிவித்தார் சினிமாவிற்கு அதிக ஆய்வுகள் செய்வேன் என்று கூறி பருத்திவீரன் பட டயலாக்கை சுட்டிக்காட்டினார்.

அண்ணா சூர்யா காக்க காக்க படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடித்தார். அதன் பிறகு நான் போலீஸ் ஆபீஸராக நடித்தேன். இன்று கூறிய அவர் போலீசாக நடிப்பது என்றாலே தனி கெத்து தான் போலீஸ் உடையெல்லாம் மாட்டிக்கொண்டு நடித்தால் மிகவும் ஆனந்தமாக இருக்கும் என்று சுட்டி காட்டினார். காவல்துறை அதிகாரிகள் நீங்கள் ஓய்வு பெற்றதாக எப்பொழுதும் நினைக்க வேண்டாம் என்றும் நாங்கள் எப்பொழுதும் உங்கள் பணிகளை மறக்கவில்லை என்று கூறினார்.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வருபவை அனைத்தும் உண்மைதான் என்றும் சம்பளத்தை வைத்து தான் அவர்கள் 10 ஆண்டுகள் செலவு செய்து உள்ளார்கள் என்று கூறிய அவர் காவல்துறை மீது விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் இன்னும் உண்மையான அதிகாரிகள் இருப்பதால்தான் நாமெல்லாம் நிம்மதியாக உறங்குகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் பெண் கல்லூரியில் இரண்டு பெண் காவல் அதிகாரிகளை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தோல்வி அடையும் பொழுதும் சரி, அதிகமாக வெற்றியடையும் பொழுதும் சரி தனியாக இருப்பது போன்று தான் இருக்கும் ஆனால் எப்பொழுதும் உங்களுடைய நண்பர்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள்.

சோசியல் மீடியா தாக்கம் காவல் துறையில் அதிகமாக உள்ளது என்று கூறிய அவர் சோசியல் மீடியாவில் எந்த குற்ற சம்பவங்கள் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அதே சமயம் மக்கள் நாம் தரும் அழுத்தத்தின் காரணமாக ஒரு வழக்கை முழுமையாக அவர்களால் விசாரிக்க முடிவதில்லை என்று தெரிவித்தார்.

காவலர்களுக்கு விடுமுறையே கிடையாது ஆனால் தற்பொழுது வந்துள்ள புதிய அரசு காவலர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள் ஆனால் அது காகித அளவில் மட்டுமே இருக்கிறது எனவே அரசு அவர்களுக்கு விடுப்பு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மாணவிகளே உங்களுக்கு மேலும் யாரும் இல்லை மேலும் யாரும் இல்லை உங்களுக்கு சமமாகவும் யாருமில்லை என்பதை புரிந்து கொண்டு செயல்படுங்கள் என்று தெரிவித்தார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நாளை புரட்டாசியின் அபூர்வ பவுர்ணமி… குடும்பத்தில் நிம்மதி இல்லையா? இதை செய்யத் தவறாதீர்கள்…!!

கோவை: நாளை (செப்டம்பர் 26) புரட்டாசி மாதத்தின் 2வது சனிக்கிழமை மிகவும் விஷேசமானது என்பதோடு, அபூர்வ பவுர்ணமியும் கூடவே வருகிறது. இந்த நன்னாளில் பெண்கள் வீடுகளில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் குறித்து...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...