AI தொழில்நுட்பத்துடன் கூடிய சுற்றுலா இணைய தளம் துவக்கம்…

கோவை: AI தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா இணையதளத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.

Advertisement

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பங்கேற்று சுற்றுலாத்துறையில் தொழில்நுட்பம் மற்றும் AI கொண்டு மேம்படுத்துவது குறித்த எடுத்துரைத்தார்.

மேலும் இந்த நிகழ்வில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் புதுபிக்கப்பட்ட இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டு பல்வேறு துறையினர் கெளரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார் உரையாற்றுகையில் சுற்றுலாத்துறை இணைய தளம் ஏற்கனவே இருந்தாலும் AI கொண்டு அதனை இன்னும் விரிவு படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

IFT நிகழ்ச்சி பிரான்ஸ்க்கு செல்லும் போது பார்த்தேன் சுற்றுலா என்றால் அது மட்டும் தான், சுற்றுலா பயணிகளை எவ்வாறு ஈர்பது என்று டிராவல்ஸ், தனியார் பங்களிப்புடன் செயலாற்றி வருகின்றனர் என்றார்.

கோவை மாவட்டம் நல்ல சுற்றுலா தளமாக உள்ளது. அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றாற்போல் நாம் மாற வேண்டும் என்றும் கூறினார்.

Advertisement

சுற்றுலா துறை பாடபிரிவு மாணவிகளுக்காக பல்வேறு விஷயங்களை ஆலோசித்து உள்ளோம்
என்றும் வரக்கூடிய காலங்களில் மாணவ மாணவிகளையும் உள்ளே கொண்டு வருவது பற்றி ஆலோசித்து உள்ளோம் என்றும் கூறிய அவர் தற்போதைய இளைஞர்கள் பல்வேறு ஆலோசனைகளை கூறுவதாகவும் இது குறித்து முதலமைச்சர் இடம் கூறும்பொழுது நல்ல விஷயம்தான் என்று ஊக்குவித்ததாக சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாடு இந்திய அளவில் 7 வது இடத்தில் உள்ளது, பட்ஜெட்டில் திருமூர்த்தி க்கு 19 கோடி அறிவித்து உள்ளோம் அங்கு தான் இந்த AI செயல்பாடே உள்ளது என்று குறிபிட்டார். சுற்றுலாத்துறை பொறுத்தவரை தமிழ்நாட்டை முதல் இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் மாமல்லபுரத்தில் 200 கோடி ரூபாய்க்கு Project செய்ய போகிறோம் என்றார்.

முதல்வர் வழிக்காட்டுதல் படி பல்வேறு முன்னெடுப்புகளை முன் எடுத்துள்ளோம் என்றும் இளைஞர்கள் அதிக ஐடியாக்களை கொடுக்கிறார்கள் மருத்துவ சுற்றுலா தமிழ்நாட்டில் நன்கு உள்ளது அனைத்து துறை சுற்றுலாவையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம் என்றார். வருகின்ற காலங்களில் உலக அளவில் சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு வரும் அளவில் இருக்கும்
அதற்கா பனியாற்றுவோம் என்றார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...