Trekking செல்பவர்களே கவனம்! மேல்முடி மலைப்பாதையில் தனியாக சிக்கிய 57 வயது நபர்

கோவை : கோவை தடாகம் அருகே மேல்முடி கோவிலுக்கு சென்றபோது வழிதவறி மலைப்பாதையில் தனியாக சிக்கிக்கொண்ட 57 வயது நபரை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

Advertisement

கோவை போத்தனூரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (57). இவர் நேற்று (செப். 26) ஆனைமலை புலிகள் காப்பகம், கோவை வனக்கோட்டம், கோவை வனச்சரகம், தடாகம் வடக்கு சுற்றுக்கு உட்பட்ட மேல்முடி பகுதியில் உள்ள கோவிலுக்கு சிலருடன் தடாகம் வழியாக சென்றுள்ளார்.

கோவிலில் சாமி தரிசனம் முடித்த பின்னர், அவருடன் சென்றவர்கள் மலைப்பாதையில் கீழே இறங்கியுள்ளனர். உடல்நிலை சரியில்லாததால் பாலசுப்ரமணியம் அவர்களுடன் செல்ல முடியாமல் பின்தங்கியுள்ளார். இதனால் மலைப்பாதையில் வழி தெரியாமல் தனியாக சுற்றித் திரிந்த அவர், ஒரு கட்டத்தில் பாதியிலேயே தங்கியுள்ளார்.

தன்னுடன் யாரும் இல்லாத நிலையில், தனது மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாலசுப்ரமணியம், தான் இருக்கும் இடத்தின் லொகேஷனையும் அனுப்பியுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த அவரது மனைவி, அவர் சென்ற வழி தெரியவில்லை என சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையடுத்து தகவல் கோவை வனச்சரக வனப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வனப்பணியாளர்கள் குழுவாக மேல்முடி மலைப்பாதைக்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மலைப்பாதையில் வழிதவறி தனியாக சுற்றித் திரிந்த பாலசுப்ரமணியத்தை வனப்பணியாளர்கள் கண்டுபிடித்து பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரை பாதுகாப்பாக மலையடிவாரத்திற்கு அழைத்து வந்தனர்.

Advertisement

நீண்ட நேரம் மலைப்பகுதியில் இருந்ததால் மிகவும் சோர்வாக காணப்பட்ட பாலசுப்ரமணியம், தடாகம் வனப்பணியாளர்கள் குடியிருப்பில் சிறிது நேரம் ஓய்வெடுக்க வைக்கப்பட்டார். உடல்நிலை சீரான பின்னர் அவர் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

புகார்களுக்கு உடனடி தீர்வு… கோவை போலீசாரின் புதிய சேவை திட்டத்திற்கு மக்கள் ஆதரவு!

கோவை மாநகர போலீசாரின் குடிமக்கள் சேவை உரிமை ஆவணத்திற்கு பொதுமக்கள் ஆதரவு; புகார்கள் மீது விரைவான விசாரணை.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...