டிரேடிங்கில் லாபம் தருவதாக பெண்ணிடம் ரூ.1.97 லட்சம் மோசடி

கோவை : இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணிடம் ரூ.1.97 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மக்கினாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை, இன்ஸ்டாகிராம் மூலம் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறியுள்ளனர்.

மர்ம நபர்களின் பேச்சை நம்பிய இளம்பெண், தனது வங்கி கணக்கில் இருந்து 14 தவணைகளாக மொத்தம் ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்தை அவர்கள் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து, மர்ம நபர்கள் கூறியபடி ஆன்லைன் டிரேடிங்கில் அவர் முதலீடு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, டிரேடிங் மூலம் கிடைத்ததாக காட்டப்பட்ட லாபத் தொகையை தனது வங்கி கணக்கிற்கு எடுக்க இளம்பெண் முயன்றுள்ளார். ஆனால், அந்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை.

Advertisement

இதையடுத்து, இன்ஸ்டாகிராம் மூலம் தன்னை தொடர்பு கொண்ட மர்ம நபர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன் பின்னரே தான் மோசடி செய்யப்பட்டதை இளம்பெண் உணர்ந்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணிடம் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்கள் யார்? அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...