திருநள்ளாறு போகப் போறீங்களா? ரூ.1350 இருந்தால் ஒரே நாளில் 14 முக்கிய கோவில்கள்… எப்படி தெரியுமா?

கோவை: தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு கோவிலில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கு, தமிழக அரசு போக்குவரத்துத்துறை சிறப்பான ஆன்மிக சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தின் கோவில் நகரம் என்றழைக்கப்படும் தஞ்சையில் உள்ள கும்பகோணமாகும். இங்கு திரும்பும் பக்கம் எல்லாம் கோவிலாகத்தான் இருக்கும். சனி பகவானுக்கு உரிய பரிகாரத் தலமாக திகழும் திருநள்ளாறு கோவிலும் இங்கு தான் அமைந்துள்ளது.

சனி தோஷம்

Advertisement

திருநள்ளாறு சன்னிதியில் கால் வைத்தாலே, ஏழரை சனி, அஷ்டமத்துவ சனி, சனி திசை உள்ளிட்ட அனைத்து வகையான சனி தோஷங்களும் நிவர்த்தி பெறும் என்பது நம்பிக்கை

நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வந்து தரிசித்து செல்வது வழக்கம். குறிப்பாக, சனிக்கிழமைகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள்.

Advertisement

பொதுவாக ஒருவரின் வாழ்க்கையில் 4 முறை சனி பகவான் வருவார். மங்கு சனி, பொங்கு சனி, தங்கு சனி, மரண சனி என 4 பரிணாமங்களில் வந்து செல்வார். ஜாதகத்தை கணித்து, தற்போது எந்தவிதமான சனி என்று தெரிந்து கொண்டு, அதற்கேற்ப திருநள்ளாறு சென்று வழிபட்டால், அதற்கேற்ற பலன்களை பெற முடியும்.

திருநள்ளாறு கோவிலில் நவகிரக ஹோமம் நடத்தி வழிபட்டால், வெற்றி நிச்சயம் உண்டாகும் என்பது ஐதீகம். இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றால், நோய்கள் நீங்கும், செல்வம், கல்வி பெருகும். அதுமட்டுமில்லாம் திருமண யோகம் வரும், புதிய வீடு மற்றும் நிலம் வாங்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறும்.

திருப்பதிக்கு இணையான தலமாக பார்க்கப்படும் திருநள்ளாறில் எள்தீபம் ஏற்றி வழிபாட்டால் மிகவும் நல்ல பலனை அளிக்கும். சனி பகவானுக்கு கருநீல வஸ்திரம் கொடுப்பது நல்லது.

கட்டணம்

இப்படிபட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருநள்ளாறுக்கு கோவையில் இருந்து செல்ல, ரூ.250 முதல் ரூ.350 வரை அரசு பேருந்தில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியார் சொகுசு பேருந்து ரூ.500ல் இருந்து ரூ.1000 வரை வசூலிக்கப்படுகிறது. எப்படியிருந்தாலும், ஒரு நபர் சென்று வர குறைந்தது ரூ.1000ல் இருந்து ரூ.1,500 வரை ஆகலாம்.

திருநள்ளாறுக்கு மட்டும் சென்று வர ஆகும் செலவில், கும்பகோணத்தில் உள்ள 14 வைணவ கோவில்களை தரிசிக்க முடியும். அது எப்படி என்பதை தற்போது விரிவாக காணலாம்.

14 கோவில்கள்

கும்பகோணத்தில் இருந்து ஒரே நாளில் மிகவும் பிரசித்தி பெற்ற 14 வைணவ திவ்ய தேச கோவில்களை தரிசனம் செய்யும் விதமாக, அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு ஆன்மிக சுற்றுலா பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது.

பத்கர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக, இந்து அறநிலையத்துறை இந்தத் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. ஏற்கனவே, மூத்த குடிமக்களுக்கான அறுபடை வீடு ஆன்மிக சுற்றுலா, கும்பகோணம் நவகிரக கோவில் சுற்றுலா உள்பட பல்வேறு ஆன்மிக சுற்றுலா திட்டங்கள் இந்து அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும், குறிப்பாக, ஆடி மாதத்தில் அம்மன் கோவில் ஆன்மிக சுற்றுலா திட்டம் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே, பக்தர்களின் கோரிக்கையை ஏற்று,கும்பகோணத்தில் உள்ள 14 வைணவ கோவில்களை தரிசிக்கும் திட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 5 மணிக்கு கும்பகோணத்தில் இருந்து அரசுப் பேருந்தில் புறப்படப்படும். அதன்பிறகு, 14 வைணவ திருக்கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, தரிசனம் முடிந்து, இரவு 8 மணிக்கு மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து விடப்படும்.இந்தத் திட்டம் நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது.

கும்பகோணம், திருவாரூர் மற்றும் நாகை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எந்தெந்த கோவில்களில் தரிசிக்கலாம்

சீர்காழியில் உள்ள ஸ்ரீ தாடாளன் பெருமாள் கோவில்

திருநாங்கூரில் உள்ள அண்ணன் பெருமாள் கோவில்

திருநகரில் உள்ள ஸ்ரீ கல்யாண ரங்கநாதர் கோவில்

திருநாங்கூரில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்

திருநாங்கூரில் உள்ள ஸ்ரீ வைகுண்ட நாதர் கோவில்

திருநாங்கூரில் உள்ள ஸ்ரீ வண்புருஷோத்தமன் பெருமாள் கோவில்

திருநாங்கூரில் உள்ள ஸ்ரீ செம்பொன் அரங்கர் கோவில்

திருநாங்கூரில் உள்ள ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள் கோவில்

திருநாங்கூரில் உள்ள ஸ்ரீ குடமாடும் கூத்தர் கோவில்

திருநாங்கூரில் உள்ள ஸ்ரீ நாராயண பெருமாள் கோவில்

மயிலாடுதுறையில் உள்ள பரிமள ரங்கநாத சுவாமி கோவில்

சேங்கனூரில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில்

நாச்சியார் கோவிலில் உள்ள ஸ்ரீ நாச்சியார் நம்பி கோவில்

திருக்குடந்தையில் உள்ள ஸ்ரீ சாரங்கபாணி பெருமாள் கோவில்

முன்பதிவு செய்வது எப்படி?

ஒரே நாளில் இந்த 14 வைணவக் கோவில்களையும் தரிசனம் செய்ய, ஒரு நபருக்கு ரூ.1,350 கட்டணமாக அரசுப் போக்குவரத்துத்துறை நிர்ணயம் செய்துள்ளது. இந்த ஆன்மிக சுற்றுலா திட்டத்தின் கீழ், தரிசனம் www.tnstc.in என்ற இணையதளத்தின் மூலம் புக் செய்யலாம். மேலும், TNSTC Mobile App அல்லது கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Flipkart Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

வடகிழக்கு பருவமழை- கோவை மாநகராட்சியின் அன்பான வேண்டுகோள்…

கோவை: வடகிழக்கு பருவமழையையொட்டி, மழைநீரை சேமிப்பதன் அவசியம் குறித்து கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வடகிழக்கு பருவமழை கோயம்புத்தூர் மாநகரப் பகுதிகளில் அதிகளவில் மழைப்பொழிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மழைநீரை...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...