கோவை: விரைவில் மீண்டும் இயக்குநராக வருவேன் என அட்லி தெரிவித்துள்ளார்.
பத்தா திரைப்படத்தின் ரோடு ட்ரிப் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்று ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
பிராட்வே திரையரங்கில் படக்குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து ‘பத்தா’ திரைப்படத்தை பார்த்தனர். தொடர்ந்து தயாரிப்பாளர் படக்குழுவினர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர், சென்னை மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தெரிவித்தார். பல்வேறு தரப்பினரும் படத்தை பாராட்டி வருவதாகவும், திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பு மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.
படத்தின் கதாநாயகி பேசுகையில், ‘பத்தா’ திரைப்படத்தில் நடித்தது அருமையான அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார். அழகான படக்குழுவுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இயக்குநரின் படப்பிடிப்பு அணுகுமுறை வித்தியாசமாக இருந்ததாகவும் கூறினார். நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தது மிகவும் கம்ஃபோர்ட்டபிளாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் அட்லி பேசும்போது
கோவையில் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த படக்குழுவினர், அடுத்த 3 வாரங்களும் தொடர்ந்து திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
தமிழ் மொழியில் எழுதுவதுடன் தமிழ் படங்களையே தயாரித்து வருவதாகவும், தனது படங்களில் அதிகளவில் தமிழ் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். கதைக்கு ஏற்ற வகையில் நடிகர்கள் அமையும் போது தமிழர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், எந்தவித பாகுபாடும் இல்லாமல் நேர்மையாக படத்திற்கு பணியாற்றுவதே முக்கியம் என்றும் கூறினார்.
‘பத்தா’ படத்திற்கு கிடைத்து வரும் ‘வேர்ட் ஆஃப் மவுத்’ வரவேற்பு சிறப்பாக இருப்பதாக தெரிவித்த அவர், பல திரையரங்குகளில் காட்சிகள் நிறைவடைந்து வருவதாகவும் கூறினார். படத்தை மேலும் மக்களிடம் கொண்டு சென்று ரிப்பீட் ஆடியன்ஸை உருவாக்குவதே அடுத்த இலக்கு என்றும் தெரிவித்தார்.
படத்தை எடுத்து வெளியிடுவதுடன் தங்களது கடமை முடிந்து விடுவதில்லை என்றும், நேரடியாக மக்களை சந்தித்து படத்தை கொண்டு சேர்ப்பதற்காகவே இந்த ரோடு ட்ரிப் நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
‘பத்தா’ திரைப்படம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஆக்ஷன் மற்றும் வன்முறை திரைப்படங்களை ரசிக்கும் ரசிகர்களைப் போலவே மனதுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தரக்கூடிய திரைப்படங்களை ரசிக்கும் ரசிகர்களும் உள்ளனர் என்றும் தெரிவித்தனர். குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து படத்தை பார்க்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
படம் பல்வேறு தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தியுள்ளதாக தெரிவித்த தயாரிப்பாளர், கமர்ஷியல் ரசிகர்கள் மட்டுமின்றி கலைநயத்துடன் படத்தை பார்ப்பவர்கள் மற்றும் விமர்சன ரீதியாக படத்தை அணுகுபவர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறினார். விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோர் படத்தை நல்ல முறையில் பேசியது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவுக்கு புதிய தயாரிப்பாளர்களை அழைத்து வர முயற்சி செய்து வருவதாகவும் தயாரிப்பாளர் எஸ்.கே. கூறினார். தன்னை நம்பி பெரிய தயாரிப்பாளர்கள் தமிழில் படங்களை தயாரிக்க முன்வர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், ஜியோ ஹாட்ஸ்டார், முராத் கேதானி உள்ளிட்டோரை தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்ததும் அந்த முயற்சியின் ஒரு பகுதி என்றும் தெரிவித்தார்.
தமிழ் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறும்போது மேலும் பல தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை நோக்கி வருவார்கள் என்றும் அவர் கூறினார்.
தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் மீது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் இருப்பதாகவும், தனக்கும் அவருக்கும் தனிப்பட்ட சகோதரத்துவ உணர்வு இருப்பதாகவும் தயாரிப்பாளர் எஸ்.கே. தெரிவித்தார். அதிகாலை நேரத்தில் விஜய் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்ததாகவும், அது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கூறினார்.
அதே நேரத்தில், தனக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தான் ஒரு திரைப்பட இயக்குநர் என்பதால் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை மகிழ்விப்பதே தனது நோக்கம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அடுத்த படங்கள் குறித்து பேசிய அவர், ஒரு திரைப்படம் நிறைவடையும் வரை அடுத்த படத்தைப் பற்றி சிந்திப்பதில்லை என்றும், தற்போது ‘பத்தா’ படத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இளைஞர்களை மையமாகக் கொண்ட முழுநீள காதல் திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் மீண்டும் இயக்குநராகும் ஆசை இருப்பதாகவும் கூறினார்.
இயக்குநர் பாலாஜியுடன் இணைந்து பணியாற்றியது குறித்து பேசிய அவர், பாலாஜியின் கதை சொல்லும் விதமும், கதையை அணுகும் முறையும் தமக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்ததாக தெரிவித்தார்.
‘பத்தா’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேட்கப்பட்டபோது, பார்ட்-2 மட்டுமின்றி அதைவிட சிறந்த பல கதைகள் தங்களிடம் இருப்பதாகவும், தொடர்ந்து நல்ல படங்களை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் புதிய முயற்சி ஒன்றும் தங்கள் மனதில் இருப்பதாக கூறினார்.
மேலும், படத்தில் நடித்துள்ள இளம் நடிகரின் நடிப்பையும் தயாரிப்பாளர் பாராட்டினார். ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களால் பேசப்படும் முக்கியமான காட்சியை அந்த நடிகர் ஒரே டேக்கில் நடித்ததாகவும், இயக்குநர் கொடுத்த சவாலை சிறப்பாக நிறைவேற்றியதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவில் பேசிய தயாரிப்பாளர் எஸ்.கே., ‘பத்தா’ திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு என்றும், ஒரு நல்ல தமிழ் படம் வெளியாகும்போது அதனை தொடர்ந்து கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.






