Breaking News: கோவை ஆனைகட்டி சாலையில் பயங்கர விபத்து!

கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி சாலையில் மாங்கரை அருகே கோச் வேனும், சைலோ காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Advertisement

ஆனைகட்டியில் இருந்து சுமார் 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு கோச் வேன் ஒன்று இன்று (அக்.4) மாலை கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. மாங்கரை அருகே சென்றபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்துவதற்காக கோச் வேன் வலதுபுறமாக சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்திசையில் கோவையில் இருந்து ஆனைகட்டி நோக்கி வந்த சைலோ கார் மீது கோச் வேன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இரு வாகனங்களிலும் இருந்த 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த தடாகம் காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

மேலும், விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் போலீசார் வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, போக்குவரத்து நெரிசலை சீர்செய்தனர்.

இந்த விபத்து குறித்து தடாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் மற்றும் வாகனங்களின் வேகம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வடகிழக்கு பருவமழை- கோவை மாநகராட்சியின் அன்பான வேண்டுகோள்…

கோவை: வடகிழக்கு பருவமழையையொட்டி, மழைநீரை சேமிப்பதன் அவசியம் குறித்து கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வடகிழக்கு பருவமழை கோயம்புத்தூர் மாநகரப் பகுதிகளில் அதிகளவில் மழைப்பொழிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மழைநீரை...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...