கோவை: அரசு பள்ளிக்கு புதிய மேசைகள் இருக்கைகள் வழங்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 143 எண்ணிக்கையிலான மேசைகளுடன் இணைக்கப்பட்ட இருக்கைகளை, M/s. Larsen & Toubro Limited, Chennai நிறுவனத்தின், சமூகப் பொறுப்பு (CSR) நிதியிலிருந்து, மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜாவிடம், மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்காக பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகராட்சி. தெற்கு மண்டலம் வார்டு எண்.93க்கு உட்பட்ட குனியமுத்தூர். இடையர்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மேம்பட்ட மற்றும் வசதியான கற்றல் சூழலை ஏற்படுத்தும் நோக்கில், M/s. Larsen & Toubro Limited, Chennai நிறுவனத்தின், சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility CSR) நிதியிலிருந்து, ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில், 143 எண்ணிக்கையிலான மேசைகளுடன் இணைக்கப்பட்ட இருக்கைகளை அந்நிறுவனத்தின் UGSS திட்ட மேலாளர் சுந்தரேசன், மாநகராட்சி ஆணையாளரிடம், பள்ளி மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.
அந்த வகையில், கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், சாரமேடு (அனுப்பர்பாளையம்) மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளுக்கு 30 எண்ணிக்கையிலும். இராமச் செட்டிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு 20 எண்ணிக்கையிலும்மேற்கு மண்டலம், இடையர்பாளையம், மாநகராட்சி 15 எண்ணிக்கையிலும்,
நடுநிலைப்பள்ளிக்கு தொடக்கப்பள்ளிக்கு 35 எண்ணிக்கையிலும் கிழக்கு மண்டலம்நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு 26 எண்ணிக்கையிலும், மத்திய மண்டலம் பாப்பநாயக்கன்பாளையம் மொத்தம் 143 எண்ணிக்கையிலான மேசைகளுடன் இணைக்கப்பட்ட இருக்கைகளை, நடுநிலைப்பள்ளிக்கு 17 எண்ணிக்கையிலும், மாணவ,மாணவியர்கள் பயன்பெறும் வகையில், வழங்கப்பட்டது.
மேலும், இதன் மூலம் மாணவ, மாணவியர்களின் அடிப்படை கல்வி வசதிகளை மேம்படுத்தி, பள்ளிகளில் வசதியான கற்றல் சூழலை உருவாக்குவதில் இத்திட்டம் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், கல்வி வளர்ச்சியே சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் என்ற நோக்குடன், மாநகராட்சி பள்ளிகளின் கல்வி உட்கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனைத் தொடர்ந்து பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 167 மாணவ, மாணவியர்களுக்கு இரண்டாம் பருவ புத்தகங்களையும். மாநகராட்சி சார்பில், எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி ஆகிய வகுப்புகளில் பயிலும் 24 மாணவ, மாணவியர்களுக்கு இரண்டாம் பருவ புத்தகங்களையும், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் வழங்கினார்.
மேலும், ஓவியம் திருக்குறள் மற்றும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.






