வீலிங் செய்து ரீல்ஸ்- கோவை காவல்துறையினரின் எச்சரிக்கை…

கோவை: பைக்கில் வீலிங் செய்து ரீல்ஸ் பதிவிட்டார் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

Advertisement

கோவை மாநகரில் இரவு நேரத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் பைக்கில் வீலிங் செய்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக உக்கடம் மேம்பாலம், ஜி்.டி மேம்பாலம் மற்றும் அவிநாசி சாலையில் வீலிங் செய்கின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி இரவில் ஹோப் காலேஜ் பகுதி சாலையில் வாலிபர் ஒருவர் பைக்கில் அபாயகரமாக வீலிங் செய்து ஓட்டி சென்றார். பின்னர் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.

Advertisement

இது குறித்து பீளமேடு எஸ்ஐ தினேஷ் குமார் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், பைக்கில் வீலிங் செய்து மற்றவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது காந்திபுரத்தில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும், பேரூர் தீத்திபாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ரஞ்சித் குமார் (20) என்பது தெரியவந்தது.

போலீசார் அவர் மீது போக்குவரத்து விதிமீறல், பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

மேலும் இதுபோன்று பைக்கில் வீலிங் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சுப பலன்களை கொடுக்க வருகிறது மகாளய அமாவாசை; இந்த 5 விஷயங்களை செய்ய மறந்திடாதீங்க…!

கோவை: எதிர்வர இருக்கும் மகாளய அமாவசை தினத்தில் செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்களைப் பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம். பொதுவாக அமாவாசை நாட்களில் நமது 3 தலைமுறை முன்னோர்கள் பூமிக்கு வந்து, அவரவர்...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...