கள்ளச் சாவி போட்டும் ஸ்டார்ட் ஆகாத R15… தள்ளிக் கொண்டு சென்ற திருடர்கள்!

கோவை: கோவை சூலூர் அருகே கணியூரில் R15 பைக்கை கள்ளச் சாவி மூலம் திருட முயன்ற 2 இளைஞர்கள், பைக் ஸ்டார்ட் ஆகாததால் அதனை தள்ளிக் கொண்டே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை சூலூர் அருகே கணியூர் பகுதியில் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த யமஹா R15 பைக்கை, கள்ளச் சாவி மூலம் திருட முயன்ற 2 வடமாநில இளைஞர்கள், பைக் ஸ்டார்ட் ஆகாததால் அதனை தள்ளிக் கொண்டே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கணியூர் பகுதியில் உள்ள வணிக வளாகம் அருகே, கடையின் உரிமையாளர் தனது யமஹா R15 இருசக்கர வாகனத்தை வழக்கம்போல் பூட்டி நிறுத்திவிட்டு சென்றுள்ளார். நள்ளிரவு சுமார் 2 மணியளவில் அங்கு வந்த 2 வடமாநில இளைஞர்கள், ஆள் நடமாட்டம் உள்ளதா என சுற்றிலும் நோட்டமிட்டுள்ளனர்.

பின்னர் பைக் அருகே சென்ற அவர்கள், தங்களிடம் வைத்திருந்த கள்ளச் சாவியை பயன்படுத்தி R15 பைக்கை ஸ்டார்ட் செய்ய முயன்றுள்ளனர். நீண்ட நேரம் முயற்சி செய்தும் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால், அங்கு அதிக நேரம் இருந்தால் சிக்கிக் கொள்ளலாம் என அஞ்சிய அவர்கள், பைக்கை தள்ளிக் கொண்டே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

Advertisement

மறுநாள் காலையில் பைக் காணாமல் போனதை பார்த்த உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் 2 இளைஞர்கள் பைக்கை திருட முயற்சித்ததும், ஸ்டார்ட் ஆகாததால் அதனை தள்ளிக் கொண்டு சென்றதும் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பைக்கை திருடிச் சென்ற இளைஞர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தப்பியோடிய இருவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சுப பலன்களை கொடுக்க வருகிறது மகாளய அமாவாசை; இந்த 5 விஷயங்களை செய்ய மறந்திடாதீங்க…!

கோவை: எதிர்வர இருக்கும் மகாளய அமாவசை தினத்தில் செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்களைப் பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம். பொதுவாக அமாவாசை நாட்களில் நமது 3 தலைமுறை முன்னோர்கள் பூமிக்கு வந்து, அவரவர்...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...