மோடியின் 25 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை- கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்…

கோவை: பிரதமர் மோடியின் 25 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை கொண்டாடும் விதமாக கோவையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement

அரசியல் வாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றினார். அவர் உரையாற்றியதை கோவையில் பாரதிய ஜனதா சார்பில் எல்ஐடி திரையில் ஒளிபரப்பினர். இந்த நிகழ்ச்சி துடியலூர் பகுதியில் நடைபெற்றது.

அதனை வானதி சீனிவாசன் கனகசபாவதி, ரமேஷ் குமார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பார்வயிட்டனர். தொடர்ந்து நூற்றும் மேற்பட்டோர் பங்கேற்ற சேவா ஜோதி யாத்திரை நடைபெற்றது.

பாரத பிரதமர் நரேந்திரமோடி அயராத உழைப்பு, அபாரமான உறுதிப்பாடு, மற்றும் தேசத்தையே வாழ்வின் முதன்மை இலக்காகக் கொண்ட தனது 25 ஆண்டுகால சேவையையும் அர்ப்பணிப்பையும் நிறைவுசெய்தும் இதே நாளில், 2001 அக்டோபர் 7 அன்று, மோடி குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்று அன்று முதல், முதலமைச்சர் மற்றும் பிரதமராக அவரது தொடர்ச்சியான சேவை, போராட்டம் மற்றும் அர்ப்பணிப்புப் பயணம், ஏழைகளின் நலன், பெண்களுக்கு அதிகாரமளித்தல், இளைஞர்களின் முன்னேற்றம் மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சேவையை பாராட்டி இன்று நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவை ஜோதி பேரணி நடைபெறுகிறது.

Advertisement

இதனையொட்டி கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவா ஜோதி பேரணி துடியலூரில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம் எல் ஏ வானதிசீனிவாசன், கனகசபாவதி, மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர், மற்றும் மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார் மற்றும் தொண்டர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் சிறப்பு விருந்தினர்கள் ஜோதியை ஏற்றிவைத்தனர். இப்பேரணி மேட்டுப்பாளையம் சாலை விஸ்வநாதபுரத்தில் தொடங்கி துடியலூர் வரை நடைபெற்றது.

முன்னதாக அரசியல் வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களிடையே உரையாற்றியதை எல் இ டி திரை அமைத்து பார்வயிட்டனர். தொடர்ந்து அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Advertisement

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் 2047 ல் இந்தியா உலகில் வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியா உலகின் தனிப்பட்ட சக்தியாக திகழ்கிறது. உள்பட தனது அனுபவங்களை கூறினார். இதனை நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் கண்டுகளித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சாதி பெயர் கொண்ட பகுதிகளுக்கு புதிய பெயர்கள் – கோவை மாநகராட்சியில் கோரிக்கை

கோவை மாநகராட்சி எல்லைக்குள் சாதி பெயர்களில் உள்ள தெருக்கள், ஊர்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என திராவிடர் தளம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...