இம்மாத இறுதிக்குள் சான்றிதழ் பெற்று கொள்க…

கோவை: 2018 முதல் பயின்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் சான்றிதழ் பெற தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கோயம்புத்தூர் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2018 முதல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்களின் சான்றிதழ்களை அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம்.

கோயம்புத்தூர் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மகளிர் ஐ.டி.ஐ. கோயம்புத்தூர் 2018 ஆம் ஆண்டு முதல் 2023 வரை பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்களின் அசல் சான்றிதழ்கள் தற்போது வரை பயிற்சியாளர்களால் பெறப்படாமல் உள்ளன.

எனவே, பயிற்சியாளர்கள் தங்களது அசல் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் மற்றும் சாதிச் சான்றிதழ்களை 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் இத்தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

இச்சான்றிதழ்கள் நீண்டகாலமாக பெறப்படாமல் உள்ளதால், குறிப்பிட்ட தேதிக்குள் சான்றிதழ்களை பெற்றுச் செல்லவில்லை எனில் அரசு ஆவணக் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் எனவும்அதற்குப் பின்பு சான்றிதழ் வேண்டி வருபவர்கள் சென்னையில் உள்ள அரசு ஆவணக் காப்பகத்திற்கு நேரில் சென்று சான்றிதழ் பெற்றுச் செல்லும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

அசல் ஆவணங்கள் பெற வரும் பயிற்சியாளர்கள் இங்கு பயிற்சி பெற்றமைக்கு ஆதாரமாக அடையாள அட்டை அல்லது கட்டணம் செலுத்திய இரசீது தவறாமல் எடுத்துக்கொண்டு வேலை நாட்களில் (காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) வரும்படித் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

கூடுதல் விவரங்களுக்குத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
0422-2965533.2965534 ஆகும்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சாதி பெயர் கொண்ட பகுதிகளுக்கு புதிய பெயர்கள் – கோவை மாநகராட்சியில் கோரிக்கை

கோவை மாநகராட்சி எல்லைக்குள் சாதி பெயர்களில் உள்ள தெருக்கள், ஊர்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என திராவிடர் தளம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...