மழைநீர் சேகரிப்பு குறித்து பொது இடங்களில் விழிப்புணர்வு- கோவை மாநகராட்சியின் முன்னெடுப்பு…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வணிகக்கட்டிடங்கள் மற்றும் பொது கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக செயல்படுத்தி, நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்தும் வகையில்பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில், ஒருமாத காலம் மழைநீர் சேகரிப்பு இயக்கம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பார்வையிட்டு அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

மேலும் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர அனைத்து பயன்பாட்டுக் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை முறையாக ஏற்படுத்தவும் ஏற்கனவே உள்ள மழைநீர் சேகரிப்பு உள்கட்டமைப்புகளை சீரமைத்து, மழைநீர் சேமிப்பதன் அவசியம் தொடர்பாகதுண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

மேலும் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் உழவர் சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து, குறும்படம் திரையிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பிரச்சார வாகனத்தின் மூலம், அரசு மருத்துமனை. உக்கடம் பேருந்து நிலையம்புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து, குறும்படம் திரையிடப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

மேலும், கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில், அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்கள் தலைமையில், மண்டல சுகாதார அலுவலர்கள் உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பள்ளிகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாகவும், பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தவும் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சாதி பெயர் கொண்ட பகுதிகளுக்கு புதிய பெயர்கள் – கோவை மாநகராட்சியில் கோரிக்கை

கோவை மாநகராட்சி எல்லைக்குள் சாதி பெயர்களில் உள்ள தெருக்கள், ஊர்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என திராவிடர் தளம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...