கோவை: கோவையில் பள்ளி மாணவர்களின் மழை நீர் சேகரிப்பு கண்காட்சி பலரது வரவேற்பை பெற்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட காளப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்களின், மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட காளப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணவமாணவியர்களின், மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப் ணர்வு கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம்கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட காளப்பட்டி, மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், மழைநீர் சேகரிப்பதின் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவ, மாணவிகளைக் கொண்டு, மழைநீர் சேகரிப்பு கண்காட்சி மற்றும் மழைநீர் சேகரிப்பு தொடர்பான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி, வாசகங்கள் (Slogan) ஒப்புவித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
இதில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு. ஊக்குவிக்கப்பட்டது.
முன்னதாக, மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி வளாகத்திலிருந்து, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட நபர்கள், விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, மண்டல சுகாதார அலுவலர் சந்திரன், மாநகராட்சி கல்விப்பிரிவு மேற்பார்வையாளர் பூங்கொடி. தலைமை ஆசிரியர் (பொ) யாரதி, அனைத்து ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






