மதுபோதையில் ஏற்பட்ட தகராறு விபரீதம்: வாலிபர் உயிரிழப்பு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

கோவை : கோவையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கி, அவரது உயிரிழப்புக்கு காரணமான வழக்கில் பக்கத்து வீட்டுக்காரருக்கு 7 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை ஒத்தக்கால்மண்டபம், திருவள்ளுவர் வீதி, தங்கையன் லைன் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (27). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன் (29). கடந்த 2022-ம் ஆண்டு ராஜேஷ்கண்ணன் மதுபோதையில் விஷ்ணுவிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதனை விஷ்ணு தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த ராஜேஷ்கண்ணன், அவரை தாக்கியதுடன், அங்கிருந்த இருசக்கர வாகனத்தின் மீது தள்ளிவிட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த விஷ்ணு மயங்கி விழுந்தார்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்ணு உயிரிழந்தார்.

Advertisement

இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் ராஜேஷ்கண்ணன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், இந்த வழக்கு சாதாரண அடிதடி வழக்காக மாற்றப்பட்டு, கோவை மாவட்ட முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி, குற்றவாளி ராஜேஷ்கண்ணனுக்கு 7 மாத சிறைத்தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் கோவிந்தராஜு ஆஜரானார்.

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...