திட்டமிட்டே செய்தாரா ரஜினி? ஜெயிலர் 2வால் விஜய், அஜித் ரசிகர்கள் அப்செட்

கோவை: ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனம், விஜய், அஜித் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

Advertisement

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த 2023ம் ஆண்டு வெளியானது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவகுமார், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் போன்ற பிற மொழி பிரபலங்களும் நடித்தனர். இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ.600 கோடி வசூலை கடந்தது.

மிரட்டல் என்ட்ரி

Advertisement

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜெயிலர் 2 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கினார். இந்தப் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரஜினியுடன் முதல் பாகத்தில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன், மிருணா, சிவராஜ் குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராவத் ஆகியோருடன் வித்பாலன், யோகி பாபு, எஸ்.ஜே சூர்யா, நமோ நாராயணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், ஹிந்தி நடிகை நோரா பதேஹி ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இசையில் அனிருத் மிரட்டியுள்ளார்.

ரூ.1000 கோடி உறுதி

Advertisement

சன்பிக்ஸர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், முதல் பாகத்தைப் போலவே, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயிலர் 2 திரைப்படம் நேற்று வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.120 கோடி வசூலித்துள்ளது. இது முதல் பாகத்தை விட ரூ.20 கோடி அதிகமாகும். 2வது நாளான இன்றும் தியேட்டர்கள் நிரம்பி வழிகின்றன. வார இறுதி மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையில் நிச்சயம் கூட்டம் அலைமோதும். எனவ, நெல்சன் கண்டிப்பாக ரூ.1,000 கோடியை வசூலித்த முதல் தமிழ் இயக்குநர் என்ற பெருமையை பெறுவார் என்று ரஜினி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

படம் வெளியானது முதலே, ரஜினி ரசிகர்கள் சில காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் லீக் செய்து வருகின்றனர். அப்படி வெளியான ஒரு காட்சி தான் விஜய், அஜித் ரசிகர்களை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், தவெக என்ற கட்சியை ஆரம்பித்து, ஆட்சியையேப் பிடித்து விட்டார். இனி அவர் சினிமாவுக்கு வரப்போவதில்லை என்று தேர்தலுக்கு முன்னதாகவே அறிவித்து விட்டார். அதேபோல, நடிகர் அஜித்தும், தற்போது கார் ரேஸ்களில் தீவிரமாக பங்கேற்று வருகிறார். பல போட்டிகளில் அவரது அஜித்குமார் ரேஸிங் அணி கோப்பைகளையும் வென்றது. அஜித் சினிமாவில் இருந்து விலகவில்லை என்றாலும், அவர் இடைவெளி விட்டே, படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.

ஒரு காலத்தில் விஜய், அஜித் இடையே தான் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி நிலவியதாக அவர்களின் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொண்டனர். விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும், அஜித் தான் சூப்பர் ஸ்டார் என்றும் டிவிக்களிலேயே விவாதம் நடத்தும் அளவுக்கு மோதல்கள் வலுத்தன. விஜய்யும், ரஜினியும் காக்கா, கழுகு கதைகளை எல்லாம் சொல்லி இந்த விவாதத்தை மேலும் பெரிதாக்கினர்.

மறைமுக பதிலடி

இந்த விவகாரத்தில் அஜித், விஜய், ரஜினி என யாரும் நேரடியாக வாய் திறக்காத நிலையில், ஜெயிலர் 2 படத்தின் மூலம், ரஜினி பதிலடி கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம்.

ஒரு வசனத்தில், ‘என்னை நிறைய பேர் விதவிதமான வழிகளில் முடிக்க நினைத்தார்கள்,’ என்று கூறியிருப்பார். இதை ரஜினி ரசிகர்கள், விஜய், அஜித்தை தான் குறிப்பிட்டு வைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரப்பி வருவதுடன், என்றைக்கும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார், அவருடைய நிரந்தரமான பட்டம் இது என்று கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில், ரஜினி இதை வேண்டுமென்றே செய்தாரா? அல்லது கதைக்காக வைக்கப்பட்டதா? என்ற கேள்வியும், சந்தேகமும் எழுந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, ஜெயிலர் படத்திற்கு முன்னதாக நெல்சன் இயக்கிய படம் பீஸ்ட். இதில் விஜய் நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றன. இதனால், ஜெயிலர் படம் கையை விட்டு போகும் நிலை கூட நெல்சனுக்கு உருவாகியது. ஆனால், ரஜினி தான் இந்தப் பட வாய்ப்பை பெற்று தர உதவியதாக நெல்சனே பல பேட்டிகளில் கூறியிருந்தார்.

ரஜினி படத்தை இயக்குவதற்கு முன்பாக, விஜய்யை அண்ணன் என்று அழைத்து வந்த நெல்சன், விஜய்க்கு எதிரான இதுபோன்ற வசனங்களை வைக்கலாமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

லியோவை விட கம்மி தான்

என்னதான், ஜெயிலர் 2 முதல் நாளில் ரூ.120 கோடி வசூல் ஈட்டியிருந்தாலும், அது விஜய்யின் லியோ படத்தின் முதல் நாள் வசூலை காட்டிலும் குறைவு தான். ரஜினி நடித்த கூலி திரைப்படம் முதல் நாளில் அதிக வசூல் (ரூ.151 கோடி) என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக விஜய்யின் லியோ (ரூ.142) உள்ளது. 3வது இடத்தை தான் ஜெயிலர் 2 பிடித்துள்ளது.

கார் நிச்சயம்

ஜெயிலர் படம் வெற்றிக்கே இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிரூத், நடிகர் ரஜினி ஆகியோருக்கு சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பு நிறுவனம், சொகுசு காரை பரிசாக வழங்கியது. தற்போது, ஜெயிலர் 2 திரைப்படமும் வசூல் மழையை குவித்து வருகிறது. எனவே, படக்குழுவினருக்கு இந்த முறையும் வழங்கப்படும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஓடிடி ரிலீஸ்

தியேட்டரில் படம் வெளியாகி சக்கை போடு போட்டாலும், திரைப்படங்களை ஓடிடியில் பார்த்து ரசிக்கவும் ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் உண்டு. அவர்களுக்காக, ஜெயிலர் 2 திரைப்படம் நவம்பர் 12ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Amazon Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

மனம் உடைந்து போன தேவா… ரஜினி செய்த பேருதவி; நன்றிக்கடன் பட்ட குடும்பம்

கோவை: தமிழ் சினிமாவில் முன்னணி பின்னணி இசையமைப்பளராக வலம் வந்த தேவாவின் மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கலும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். இவரது வாழ்க்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு திருப்புமுனையையும் ஏற்படுத்தும்...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...