அன்னூரில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்- தேதி அறிவிப்பு…

கோவை: அன்னூர் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெற உள்ளது.

கோவை மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டம் வரும் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் அன்னூர் வட்டத்தில் நடைபெற உள்ளது.

Advertisement

இதன்படி, அக்டோபர் 22-ஆம் தேதி காலை 9 மணி முதல் அக்டோபர் 23-ஆம் தேதி காலை 9 மணி வரை, கோவை மாவட்டத்தில் அன்னூர் வட்டாரங்களில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இந்த ஆய்வின்போது, வட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

Advertisement

அப்போது, பொதுமக்களிடம் குறைகள் கேட்டறியப்பட்டு, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அக்டோபர் 22-ஆம் தேதி மாலை 4 மணியளவில், சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்களிடம் குறைகள் கேட்டறியும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நேரடியாகத் தெரிவிக்கலாம்.

Advertisement

பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுப் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் கனமழை; வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி! – VIDEO

கோவையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகளும் தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கின்றனர்.

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...