கோவையில் ஆயுத பூஜை பொருட்கள் விலை உயர்வு- காரணம் என்ன?

கோவை: எரிபொருள் விலை உயர்வால் ஆயுத பூஜை பொருட்களில் விலையும் உயர்ந்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வால் ஆயுத பூஜைக்கான பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கோவையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது. இந்த ஆண்டு 20 டன்னுக்கும் அதிகமான பூக்கள் விற்பனையாகும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். கோவை பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பூக்களை கேரள மாநில வியாபாரிகளும் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.

நாளை ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் மட்டுமின்றி வாழை இலைகள், மாவிலைத் தோரணங்கள், தென்னை ஓலையால் செய்யப்பட்ட தோரணங்கள் மற்றும் வீடுகள், வாகனங்களுக்கான கண் திருஷ்டி பொருட்கள் உள்ளிட்ட பூஜைக்குத் தேவையான பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

பொதுமக்கள் மற்றும் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆயுத பூஜைக்குத் தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இருப்பினும், எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதால், பூஜைப் பொருட்களின் விலையும் இந்த ஆண்டு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

மேலும், விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிகளவில் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை என்றும், வழக்கத்தைவிடக் குறைந்த அளவிலேயே பொருட்களை வாங்கிச் செல்வதாகவும் வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் கனமழை; வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி! – VIDEO

கோவையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகளும் தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கின்றனர்.

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...