அரசு பேருந்து ஓட்டுநருக்கு தீடீரென வலிப்பு- கோவையில் சோகம்…

கோவை: கோவையில் வலிப்பு ஏற்பட்டதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநரும் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை குனியமுத்தூர் சாலையில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் நூர் முகமது என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

பேருந்து ஓட்டுநரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்தில், பெண் உட்பட இருவர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாநகரப் பகுதியில் உள்ள குனியமுத்தூர் சாலை, சுண்ணாம்புக் கால்வாய் பேருந்து நிறுத்தம் அருகே, 66-ஆம் எண் கொண்ட அரசு பேருந்தை மார்ட்டின் என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் தாறுமாறாகச் சென்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நூர்முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஆட்டோவில் பயணம் செய்த ஒருவர் மற்றும் பெண் ஒருவர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கரும்புக்கடை காவல் துறையினர் மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

படுகாயமடைந்த இருவர் மற்றும் பேருந்து ஓட்டுநரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பொழுது துரதிஷ்டவசமாக பேருந்து ஓட்டுனரும் உயிரிழந்தார். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, விபத்துக்குள்ளான அரசு பேருந்தை போக்குவரத்துக் காவலர்கள் அப்புறப்படுத்தி, போக்குவரத்து பாதிப்பை சீர் செய்தனர். ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பு நிலவியது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...