சட்டத்தைக் காக்க வேண்டிய சிறைக் காவலரே வழிப்பறியில் கைது! கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

கோவை: கோவையில் தொழில் விஷயமாக வந்த கேரள மீன் வியாபாரியை காரில் கடத்திச் சென்று தாக்கி, ரூ.15 லட்சம் பறித்த வழக்கில் கோவை மத்திய சிறைக் காவலர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த முகமது அஸ்லாம், மொத்த மீன் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தொழில் தொடர்பான பணிகளுக்காக ரூ.15 லட்சம் ரொக்கத்துடன் கோவைக்கு வந்துள்ளார்.

Advertisement

தனது வேலைகளை முடித்துவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்குச் செல்வதற்காகப் பணப்பையுடன் போத்தனூர் ரயில் நிலையம் நோக்கி நடந்து சென்றுள்ளார்.

அப்போது, காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துள்ளது. பின்னர், அவரை வலுக்கட்டாயமாகக் காரில் ஏற்றிக் கடத்திச் சென்ற அந்தக் கும்பல், சரமாரியாகத் தாக்கி அவரிடம் இருந்த ரூ.15 லட்சம் பணத்தையும் பறித்துள்ளது. தொடர்ந்து, போத்தனூர் புறநகர்ப் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அவரைக் கீழே இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

Advertisement

காயமடைந்த முகமது அஸ்லாம், இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

போத்தனூர் ரயில் நிலையம் மற்றும் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், இந்த வழிப்பறியில் கோவை மத்திய சிறையில் பணியாற்றும் சிறைக் காவலர் பட்டுராஜனுக்குத் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதையடுத்து, பட்டுராஜனைப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், இந்தச் சம்பவத்துக்குத் துணையாக இருந்ததாகக் கூறப்படும் கோவையைச் சேர்ந்த இத்திரிஸ் அகமதுவையும் கைது செய்தனர். பின்னர், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பட்டுராஜன் பாதுகாப்பு காரணங்களுக்காக கோபிசெட்டிபாளையம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பிடிக்கத் தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள வியாபாரியைக் கடத்தி ரூ.15 லட்சம் பறித்த வழக்கில் மத்திய சிறைக் காவலரே கைது செய்யப்பட்டிருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு- கோவை மாநகராட்சி நிர்வாகம்…

கோவை: வடகிழக்கு பருவமழையையொட்டி மழைநீர் தேக்கம், மழைநீர் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையையோட்டி, மழைநீர் தேக்கம் மற்றும் மழைநீர் தொடர்பான பாதிப்புகள் குறித்து...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...