நொய்யலில் எழுவது சோப்பு நுரையா? அவதிப்படும் கோவை மக்கள் கொடுக்கும் ஆதாரம்!

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி, நான்கு மாவட்டங்களைக் கடந்து காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆறு, கழிவுநீர் மற்றும் சாயக்கழிவுகளால் மாசடைந்து வருவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் இந்த ஆற்றில் அதிக அளவில் நுரை பொங்கி எழுந்த நிலையில், ஆற்றங்கரையோரம் வா்ும் மக்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நொய்யல் ஆறு, சிற்றோடைகளின் நீரையும் உள்வாங்கி சமவெளிப் பகுதிகளை நோக்கிப் பயணிக்கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் வழியாகச் செல்லும் இந்த ஆறு, கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது.

இந்த ஆறு கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக விளங்குவதுடன், அதன் வழித்தடத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது.ஒரு காலத்தில் விவசாயத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவிய நொய்யல் ஆறு, தற்போது பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கலப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

குறிப்பாக, கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் நகர்ப்புறக் கழிவுநீர், சாயப்பட்டறை மற்றும் சலவை ஆலைக் கழிவுகள் ஆற்றில் கலப்பது நீரின் தரத்தைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினையாக இருந்து வருகிறது.

கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் சாயப்பட்டறைகள் இந்த ஆற்றில் சாயக்கழிவுகளைக் கலப்பதால், ஆற்றில் நுரை பொங்கி எழுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், கடந்த வாரம் சுண்ணாம்புக் கால்வாய் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் வெண்ணிற நுரை பொங்கி, ஊரெங்கும் பரவியது.

Advertisement

சுண்ணாம்புக் கால்வாய் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், ஆற்றில் அடிக்கடி நுரை பொங்கி எழுவதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் குழந்தைகளுக்கு சிரங்கு உள்ளிட்ட தோல் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், வெள்ளி மற்றும் செம்புப் பாத்திரங்கள் கருத்துப் போவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டாலும், பல ஆண்டுகளாகப் பிரச்சினை தொடர்வதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சாயப்பட்டறை நடத்துவோருடன் அதிகாரிகள் சமரசம் செய்துகொள்வதாகவும், அதனால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவையின் உயிர்நதியாக விளங்கிய நொய்யல் ஆற்றைப் பாதுகாக்க, கழிவுநீர் கலக்கும் இடங்களைக் கண்டறிந்து தடுப்பது, சாயக்கழிவுகள் முறையாகச் சுத்திகரிக்கப்படுவதை உறுதி செய்வது, நீரின் தரத்தைத் தொடர்ந்து பரிசோதிப்பது போன்ற நடவடிக்கைகள் அத்தியாவசிமாக உள்ளன.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் முதல் முறையாக பார்வையற்றோருக்கான கால்பந்து போட்டி! வீரர்களை ஊக்குவிக்க மக்களுக்கு அழைப்பு!

பார்வை மாற்றுத்திறனாளிகளின் திறமையை வெளிக்கொண்டு வருவதுடன், அவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் நடைபெற உள்ள இந்தப் போட்டி கோவையில் விளையாட்டு ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...