தீபாவளி பண்டிகை: சென்னை – கோவை இடையே சிறப்பு ரயில்கள்! எப்போ புக்கிங்…?

கோவை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை சென்ட்ரல் – கோவை இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பை சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது.

Advertisement

இதன்படி, சென்னை சென்ட்ரல் – போத்தனூர் இடையே ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் இருந்து கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு இந்தச் சிறப்பு ரயில் சேவை உதவியாக இருக்கும்.

Advertisement

சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 6ஆம் தேதி இரவு 11.55 மணிக்குப் புறப்படும் ரயில் எண் 06023, மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மறுமார்க்கத்தில், நவம்பர் 9ஆம் தேதி இரவு 11.30 மணிக்குப் போத்தனூரில் இருந்து புறப்படும் ரயில் எண் 06024, மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்னை சென்ட்ரலைச் சென்றடையும். இந்த ரயிலும் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Advertisement

இந்தச் சிறப்பு ரயில்களில் ஏசி இரண்டடுக்கு, ஏசி மூன்றடுக்கு, ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு பெட்டியுடன் கூடிய பிரேக் வேன் ஆகிய பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (அக். 29) காலை 8 மணிக்குத் தொடங்கும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் நிலையில், இந்தச் சிறப்பு ரயில் சேவை சென்னை மற்றும் கோவை இடையே பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் முதல் முறையாக பார்வையற்றோருக்கான கால்பந்து போட்டி! வீரர்களை ஊக்குவிக்க மக்களுக்கு அழைப்பு!

பார்வை மாற்றுத்திறனாளிகளின் திறமையை வெளிக்கொண்டு வருவதுடன், அவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் நடைபெற உள்ள இந்தப் போட்டி கோவையில் விளையாட்டு ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...