எதிரில் வரும் முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியவில்லை- கோவையில் கடும் பனிமூட்டம்…

கோவை: எதிரில் வரும் வாகனங்கள் முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு வாளையார் பகுதியில் பனிமூட்ட்ம் நிலவியது.

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு கேரள எல்லை பகுதியான வாளையார் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

Advertisement

பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் தொடர் கன மழை பெய்தது அதனைத் தொடர்ந்து கடந்த நான்கு ஐந்து நாட்களாக மழை பொழிவு குறைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் அதிகாலை நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. அதேசமயம் குளிர் காலமும் துவங்கியதால் பொதுமக்கள் ஸ்வட்டர் உள்ளிட்ட கதகதப்பான ஆடைகளை அணிந்து கொள்கின்றனர்.

அதே சமயம் அதிகாலை அதிகளவு பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரிய விட்ட வண்ணம் பயணம் மேற்கொள்கின்றனர். கோவை மாநகர் மற்றும் புறநகர் என பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Advertisement

அதன்படி கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு கேரள மாநில எல்லை பகுதியான வாளையார் பகுதியில் இன்று அதிக அளவு பனிமூட்டம் காணப்பட்டது எதிரில் வரும் வாகனங்கள் முன்னால் செல்லும் வாகனங்கள் கூட சரியாக தெரியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் வாகன முகப்பு விளக்குகளை எரிய விட்ட வாகன் ஓட்டிகள் மிகவும் மெதுவாக வாகனங்களை கவனத்துடன் இயக்கி வருகின்றனர்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவ மழை மருத்துவ முகாம்

கோவை: கோவை மாநகராட்சியில் 264 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 15,328 பேர் பயனடைந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடந்த 8 நாட்களாக நடத்தப்பட்ட...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...