கோவையில் காவலர்களிடம் இருந்து தப்பிய கைதி…

கோவை: கோவை மத்திய சிறை வாசலில் இருந்து கைதி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்து வரப்பட்ட வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட ராகவன், சிறை நுழைவுவாயில் அருகே போலீசாரின் பிடியிலிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement

கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற வழிப்பறி வழக்கில் ராகவனை அன்னூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ராகவனைப் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து வந்தனர்.

சிறை நுழைவுவாயில் அருகே வாகனத்தில் இருந்து இறக்கி அவரைச் சிறைக்குள் அழைத்துச் செல்ல முயன்றபோது, போலீசாரின் கவனத்தைத் திசைதிருப்பிய ராகவன் திடீரென அங்கிருந்து தப்பியோடினார்.

Advertisement

அவரைப் பிடிக்க போலீசார் விரட்டிச் சென்றும், அவர் சிக்காமல் தப்பியதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து தகவலறிந்த பந்தயசாலை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தப்பியோடிய ராகவனைப் பிடிப்பதற்காகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய சிறை வளாகம், நஞ்சப்பா சாலை, வ.உ.சி. பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இதற்கிடையே, ராகவன் கடந்த ஜூன் மாதத்திலும் போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடியவரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சிறை நுழைவுவாயில் அருகே கைதி தப்பியோடிய சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பையும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் நள்ளிரவு வரை தீபாவளி ஷாப்பிங்? ரெடியா மக்களே! முக்கிய அறிவிப்பு!

கோவையில் தீபாவளி ஷாப்பிங் நள்ளிரவு 1 மணி வரை? முக்கிய கடைவீதிகளில் போலீஸ் பாதுகாப்பு

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...