TNPSC GROUP 2 தேர்வு- வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு…

கோவை: நவம்பர் 1ம் தேதி நடைபெறும் TNPSC Group 2 தேர்வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் 2. முதல்நிலைத் தேர்வானது (குரூப்-2 மற்றும் 2A) எதிர்வரும் 01.11.2026 அன்று காலை 09.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 44 பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள 73 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.

Advertisement

இந்த தேர்வில் 20,980 தேர்வர்கள் கலந்துகொள்ள உள்ளனர். தேர்வானது சீரிய முறையில் நடைபெற மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு, போக்குவரத்து, தடையற்ற மின்சாரம். அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேர்வர்கள் காலை 09.00 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். காலை 09.00 மணிக்குப் பின்பாக எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திற்குள் செல்ல தேர்வர்களுக்கு அனுமதி இல்லை எனவும், அனைத்து தேர்வர்களும் காலை 09.00 மணிக்கு முன்பாக தேர்வு மையத்திற்குள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் என தேர்வு அறிவிக்கையில் (அறிவிக்கை எண் 07/2026, விளம்பர எண்- 740) குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பொருட்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும்,

தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள், தேர்விற்கான நுழைவுச் சீட்டு, கருப்பு நிற பந்துமுனைப் பேனா, அரசினால் வழங்கப்பட்டுள்ள ஒரு ஆளறி அடையாள ஆவணம் ஆகிய மூன்று பொருட்களைத் தவிர வேறு எந்த பொருட்களையும் கொண்டு வருதல் கூடாது.

Advertisement

மேலும், தேர்வர்கள் கடிகார முள் உள்ள கடிகாரங்களை மட்டுமே அணிந்து வர அனுமதி உண்டு. டிஜிட்டல் கடிகாரங்களை அணிந்து வர அனுமதி இல்லை. தேர்வர்கள் தேர்வு முழுமைக்கும் கருப்பு நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், ஒன்றிற்கு மேற்பட்ட நிற பேனாக்களை பயன்படுத்தும் நேர்வுகளில், மேற்படி விடைத்தாளின் செல்லுபடித் தன்மை நீக்கறவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தேர்வர்கள் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும், தேர்வு குறித்து எழும் சந்தேகங்களுக்கும், உதவிகளுக்கும் 1800 419 0958 என்ற Toll Free எண் அல்லது 044. 69097777, 044-25300338, 044-25300339, 044-25300340 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுமாறும், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தை 6384123073 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எதிரில் வரும் முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியவில்லை- கோவையில் கடும் பனிமூட்டம்…

கோவை: எதிரில் வரும் வாகனங்கள் முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு வாளையார் பகுதியில் பனிமூட்ட்ம் நிலவியது. கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு கேரள எல்லை பகுதியான வாளையார் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...