கோவை: சீமைத்தினை, பாப்பரை, குலசாமை சாகுபடி குறித்து கோவையில் 50 விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை – சீமைத்தினை, பாப்பரை, குலசாமை ஆகிய ஊட்டச்சத்து நிறைந்த பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நவம்பர் 5ஆம் தேதி பயிற்சி நடைபெற்றது. இதில் 50 விவசாயிகள், 40 வேளாண் விரிவாக்க அலுவலர்கள் என மொத்தம் 90 பேர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இப்பயிற்சி நடத்தப்பட்டது. பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப இயக்குநர் mசெந்தில் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார்.
மண் மற்றும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ற சாகுபடி முறைகள், உழவியல் நுட்பங்கள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள் குறித்து வல்லுநர்கள் விளக்கினர். இப்பயிர்களின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், இப்பயிர்களிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிப்பது, அவற்றுக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பயிற்சியில் கற்ற தொழில்நுட்பங்களை வயல்களில் பயன்படுத்துவதன் மூலம் மாற்றுப் பயிர் சாகுபடியை விரிவுபடுத்தவும், விவசாயிகளுக்குக் கூடுதல் வருமான வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.






