கோவையில் 40 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்… மாநகராட்சி தீவிரம்…!

கோவை: தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு, கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் சுமார் 40 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இதுதவிர, வழக்கமாகச் சேகரிக்கப்படும் குப்பைகள் 220 டன் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கோவையில் நேற்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையடுத்து, சாலையோரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய பட்டாசுக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் இன்று காலை முதல் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

ஐந்து மண்டலங்களிலும் லாரிகள், இலகுரக வாகனங்கள், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் என மொத்தம் 116 வாகனங்கள் இப்பணிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை வழக்கமான குப்பைகளையும் சேர்த்து சுமார் 220 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

நாளை பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட உள்ளதால், இன்றிரவும் தூய்மைப் பணியைத் தொடர மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சீமைத்தினை, பாப்பரை, குலசாமை சாகுபடி- கோவையில் 50 விவசாயிகளுக்குப் பயிற்சி…

கோவை: சீமைத்தினை, பாப்பரை, குலசாமை சாகுபடி குறித்து கோவையில் 50 விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை – சீமைத்தினை, பாப்பரை, குலசாமை ஆகிய ஊட்டச்சத்து நிறைந்த பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், கோவையில் உள்ள...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...