கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி 12.11.2026 மற்றும் 13.11.2026 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை அளிக்கப்பட உள்ளது.
வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும் இதில் மதிப்பூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் (Dehydrated vegetables and fruits)
பலவகை பழ ஜாம் (Mixed fruit jam)
பழரசம் (Squash) தயார் நிலை பானம், ஊறுகாய் (Pickles) ஊறுகனி (Candy) பழப்பார் (Fruit bar) ஆகியவை செய்ய பயிற்சி அளிக்கப்பட உள்ளது
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1500 + GST 18%) பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





