கோவையில் வணிகமுறை காய்கறி பழங்கள் தயாரிப்பு பயிற்சி…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி 12.11.2026 மற்றும் 13.11.2026 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை அளிக்கப்பட உள்ளது.

Advertisement

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும் இதில் மதிப்பூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் (Dehydrated vegetables and fruits)
பலவகை பழ ஜாம் (Mixed fruit jam)
பழரசம் (Squash) தயார் நிலை பானம், ஊறுகாய் (Pickles) ஊறுகனி (Candy) பழப்பார் (Fruit bar) ஆகியவை செய்ய பயிற்சி அளிக்கப்பட உள்ளது

Advertisement

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1500 + GST 18%) பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

வெண்டைக்காய்க்கான அறுவடை முந்தைய விலை அறிவிப்பு…

கோவை: வெண்டைக்காய்க்கான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடைக்கு முந்தைய விலை முன்னறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வெண்டைக்காய் உற்பத்தியில் இந்தியா முதன்மையான நாடாக உள்ளது. இதன் சாகுபடி முக்கிய வேளாண் மண்டலங்களில் பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. மத்திய வேளாண்மை...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...