வெண்டைக்காய்க்கான அறுவடை முந்தைய விலை அறிவிப்பு…

கோவை: வெண்டைக்காய்க்கான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடைக்கு முந்தைய விலை முன்னறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெண்டைக்காய் உற்பத்தியில் இந்தியா முதன்மையான நாடாக உள்ளது. இதன் சாகுபடி முக்கிய வேளாண் மண்டலங்களில் பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் இரண்டாவது முன்மதிப்பீடுகளின்படி (2025-26), சுமார் 5.75 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வெண்டை சாகுபடி செய்யப்பட்டு, இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 79.34 லட்சம் டன்கள் விளைச்சல் எட்டப்பட்டுள்ளது.

Advertisement

குஜராத், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் தேசிய அளவில் அதிக உற்பத்தியைக் கொண்டிருந்தாலும், தமிழ்நாடும் ஒரு முக்கிய உற்பத்தி மையமாகவும், அதிக நுகர்வு கொண்ட மாநிலமாகவும் திகழ்கிறது. தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வெண்டை சாகுபடி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். இந்தப் பயிர் முக்கியமாக ஆடிப் பட்டம் மற்றும் தை பட்டம் ஆகிய இரு பருவங்களில் பயிரிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் வெண்டை சாகுபடி 0.20 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு இதன் மூலம் மொத்தம் 2.29 லட்சம் டன்கள் விளைச்சல் எட்டப்பட்டுள்ளது. நுகர்வோர் அடர் பச்சை நிறத்தில், பளபளப்பான தோற்றம் கொண்ட வெண்டைக்காய்களையே விரும்புவதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

தற்போது, திப்பம்பட்டி, அத்திகொம்பு, பார்ச்சலூர், அம்பிலிக்கை, மணப்பாறை, ஒட்டன்சத்திரம், கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் போன்ற உள்ளூர் உற்பத்திச் சந்தைகளிலிருந்து புதிய விளைச்சல் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய மொத்த விற்பனைச் சந்தைகளுக்கும், உழவர் சந்தைகளுக்கும் வந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கும். உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவு பிரிவு, ஒட்டன்சத்திரம் சந்தைகளில் கடந்த 15 ஆண்டுகளில் நிலவிய வெண்டைக்காய் விலைகளை ஆய்வு செய்தது. மேலும், இது குறித்து வர்த்தகர்களிடம் விரிவான ஆய்வையும் மேற்கொண்டது.

Advertisement

பொருளாதார காலத்தொடர் பகுப்பாய்வு மற்றும் தற்போதைய சந்தை வரத்து ஆகியவற்றின் அடிப்படையில், அறுவடை காலத்தில் தரமான வெண்டைக்காயின் பண்ணை விலை கிலோவுக்கு சுமார் 25 ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், அறுவடை காலத்தில் மழை பெய்தாலோ அல்லது பிற மாநிலங்களிலிருந்து வெண்டைக்காய் வரத்து அதிகரித்தாலோ, அது உள்ளூர் சந்தை விலையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வது குறித்து அதற்கேற்ப திட்டமிட்டு முடிவெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் வணிகமுறை காய்கறி பழங்கள் தயாரிப்பு பயிற்சி…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி 12.11.2026...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...