கோவை: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை பதவி நீக்கம் செய்யக் கோரி DYFI ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் முதல்வர் விஜய்க்கும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகாரில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருண்விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அரசியல் ரீதியாகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரைப் பதவி விலக வலியுறுத்தியும், முதல்வர் விஜய் அவரைப் பதவி நீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் சாட்டை சுழற்றுவது, வாயை மூடி கொண்டு இருப்பது, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் முதல்வர் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களுடன் கூடிய கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.


