கோவை செங்காடு கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் – 88 விவசாயிகள் பயன்

கோவை: செங்காடு கிராமத்தில் கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அக்ரஹார சாமக்குளம் ஊராட்சி செங்காடு கிராமத்தில் கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பவன் குமார் முகாமைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, 42 பயனாளிகளுக்கு தாது உப்பு கலவைகளையும், 10 பயனாளிகளுக்கு தீவனச் சோளங்களையும் வழங்கினார்.

முகாமில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு நீக்கம், செயற்கை கருவூட்டல், மலட்டுத்தன்மை நீக்கச் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. மேலும், ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 88 விவசாயிகள் இம்முகாமின் மூலம் பயனடைந்தனர்.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026–2027ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் செப்டம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரை சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, கோவை கோட்டத்தில் 144 முகாம்களும், பொள்ளாச்சி கோட்டத்தில் 72 முகாம்களும் என மொத்தம் 216 முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் கால்நடைப் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சுரேகா, உதவி இயக்குநர் தங்கமுத்து, நோய் கண்காணிப்புப் பிரிவு உதவி இயக்குநர் சுரேஷ்குமார், கால்நடை மருத்துவர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...