கோவை வடவள்ளியில் 10 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

கோவை : கோவை வடவள்ளியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 10 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடவள்ளி சுல்தானியாபுரம் முதல் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (27). இவரது மனைவி ராஜேஸ்வரி (24). இவர்களது 10 மாத ஆண் குழந்தை ராஜவேலு, கடந்த நான்கு மாதங்களாகச் சளித் தொல்லையால் அவதிப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரமாகக் குழந்தைக்குத் தோல் ஒவ்வாமையும் காய்ச்சலும் இருந்துள்ளன.

கடந்த 22-ஆம் தேதி குழந்தைக்குக் கடுமையான நெஞ்சுச் சளியும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டன. இதையடுத்து பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கோவில்மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர்.

Advertisement

அங்கு ஆக்சிஜன் அளித்தும் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையைக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதைக் கேட்ட பெற்றோரும் குடும்பத்தினரும் கதறி அழுதது அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

திருப்பரங்குன்றம் சென்றாரா எல்.முருகன்?- கோவையில் தடுத்து நிறுத்திய காவல்துறை…

கோவை: திருப்பரங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் எல் முருகன் காவல்துறையினரால் தடுத்த நிறுத்தப்பட்டதால் அங்கிருந்த தொண்டர்கள் ஆக்ரோஷமடைந்தனர். கார்த்திகை தீபம் என்று கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பரங்குன்றத்தில் இன்றைய தினம்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...