கோவை: திருப்பரங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் எல் முருகன் காவல்துறையினரால் தடுத்த நிறுத்தப்பட்டதால் அங்கிருந்த தொண்டர்கள் ஆக்ரோஷமடைந்தனர்.
கார்த்திகை தீபம் என்று கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பரங்குன்றத்தில் இன்றைய தினம் சர்ச்சைக்குரிய தீபத்தூண் இடத்தில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது.
அரசு அதிகாரிகளுடன் குறிப்பிட்ட நபர்கள் கோவில் பூசாரிகள் மட்டுமே சென்று தீபம் ஏற்றி வழிபட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் திருப்பரங்குன்றம் தீபத் தூணுக்கு சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அந்த கோவிலை சுற்றி ஒரு கட்சியினர் இயக்கத்தினர் கூடி நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியினர் திருப்பரங்குன்றம் செல்வதற்கு முன்பாகவே வீட்டுக் காவலில் காவல்துறையினரால் அடைத்து வைக்கப்பட்டு வருகின்றனர் இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. காவல்துறையினரின் அந்த நடவடிக்கைக்கு கண்டனங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் முகாம் அலுவலகத்தில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான எல் முருகன் வாகனம் அன்னூர் அருகே சென்று கொண்டிருந்த பொழுது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அவரது ஆதரவாளர்கள் காவல் துறையினரின் அந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். அதேசமயம் எல் முருகன் காவல்துறையினரிடம் மதுரை வரை செல்வதற்கு உரிமை உள்ளது. எதற்காக தடுத்து நிறுத்தினீர்கள்! உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் காவலில் வைக்க அழைத்து செல்கின்றனர்.


