தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்த பத்மஸ்ரீ அசோக் குமார் சிங்

கோவை: பத்மஸ்ரீ அசோக் குமார் சிங் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்து பாராட்டினார்.

புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியும், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICAR-IARI) முன்னாள் இயக்குநருமான பத்மஸ்ரீ முனைவர் அசோக் குமார் சிங், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் மதராஸ் வேளாண் மாணவர்கள் கூட்டமைப்பு (MASU) அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவருக்கு கூட்டமைப்பின் தலைவர் முனைவர் செந்தில் நடேசன் வரவேற்பு அளித்தார்.

தொடர்ந்து, 1913-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதராஸ் வேளாண்மை இதழின் வரலாறு, அதன் வளர்ச்சி மற்றும் வேளாண் ஆராய்ச்சியில் இதழ் ஆற்றி வரும் பங்களிப்பு குறித்து நிர்வாகிகள் விளக்கினர். மேலும், இதழின் பழமையான பதிப்புகள் மற்றும் பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வரும் அரிய ஆவணத் தொகுப்புகளையும் பார்வையிட்டார்.

இதனைப் பாராட்டிய அசோக் குமார் சிங், இதழின் வரலாற்றுச் சிறப்பையும் அதன் ஆவணப் பாதுகாப்பையும் வெகுவாகப் பாராட்டினார். இதழின் கல்விசார் தரத்தை மேம்படுத்துதல், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுதல், ஆராய்ச்சியாளர்களிடையே அதன் அணுகலை அதிகரித்தல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

Advertisement

இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் துணைத் தலைவர் முனைவர் எம். கார்த்திகேயன், பொருளாளர் முனைவர் பாலாஜி கண்ணன், செயலாளர் முனைவர் கே. பூமிநாஜ், இணைச் செயலாளர் முனைவர் ஆர். கங்கை செல்வி மற்றும் மதராஸ் வேளாண்மை இதழின் தலைமை ஆசிரியர் முனைவர் வி. ராஜன் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் அசோக் குமார் சிங்குடன் கூட்டமைப்பு நிர்வாகிகள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை வடவள்ளியில் 10 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

கோவை வடவள்ளியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 10 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...