கோவையில் ரயில் நிலையங்களை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

கோவை: கோவை மத்திய ரயில் நிலையம் மற்றும் வடகோவை ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கு இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கோவை மத்திய ரயில் நிலையம் மற்றும் வடகோவை ரயில் நிலையம் ஆகிய இரண்டையும் மேம்படுத்துவது குறித்தான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால், கோவை எம்பி கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் ரயில்வே துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொண்டனர்.

தொடர்ந்து ரயில் நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் ரயில் நிலையத்தை மேம்படுத்துதல் போக்குவரத்து நெரிசலை குறைத்தல் அடிப்படை வசதிகளை அதிகப்படுத்துதல் கூடுதலான ரயில்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டன

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை எம்பி கணபதி ராஜ்குமார், கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். கோவையில் இருந்து மதுரை மார்க்கமாக தூத்துக்குடி திருச்செந்தூர் செல்லும் ரயில், கோவையில் இருந்து பெங்களூர் செல்லும் தினசரி ரயில் ஆகியவை கூடுதலாக கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கோவை- சேலம் மெமு ரயில்கள், கேட்கப்பட்டுள்ளதாகவும் பொள்ளாச்சி கோவைக்கும் ரயில்கள் வேண்டுமென கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அடிப்படை வசதிகளான கழிவறைகள், மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் ஆகியவை கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கையும் மக்களின் சார்பாக முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர் இங்கிருந்து புறப்படும் ரயில்கள் சிலவற்றை வடகோவை, போத்தனூருக்கு மாற்றினால் போக்குவரத்து நெரிசல் குறையும் என ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். டைடல் பார்க் அருகிலும் ரயில் நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளதாகவும் அது குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் கோவையில் இருந்து திருச்சி மார்க்கமாக வேளாங்கண்ணிக்கும் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரயில்வே போலீசாரின் எண்ணிக்கையை கூடுதலாக கேட்டுக் கொண்டிருப்பதாகவும் காவலர்களுக்காக உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் சொகுசு காரில் பிடிபட்ட வெளிநாட்டு மதுபானங்கள்- தேர்தல் பறக்கும் படை அதிரடி…

கோவை: கோவையில் சொகுசு காரில் இருந்த வெளிநாட்டு மதுபானங்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ​தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை...

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

கோவை: தடாகம் அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் கூட்டத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில்...