Chennai weather: சென்னையில் இந்தவார வானிலை!

Chennai weather: சென்னையில் இந்த வார வானிலை நிலவரத்தை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

சென்னையில் இன்றும் (Sep-2), நாளையும் இடியுடன் கூடிய மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

இந்த இரு நாட்களும் குறைந்தது 26 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 4ம் தேதி ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அன்றைய தினம் குறைந்தது 27 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 5ம் தேதி முதல், 7ம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும், இந்த நாட்களில் குறைந்தது 27 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

வானிலை மையத்தின் கணிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டது. புதிய வானிலை அறிவிப்புகள் வெளியாகையில் நமது தளத்தில் அவை வெளியிடப்படும். இணைந்திருங்கள் வாசகர்களே

Chennai செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

முக்கிய அறிவிப்பு: தமிழ்நாடு தேர்தல் தேதி இன்று வெளியாகிறது!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது; அறிவிப்புடன் தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வரும்.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய...