விஜய் பிரச்சாரம் பார்த்தீர்களா?- கோவையில் அமைச்சர் அன்பில் அளித்த பதில்…

கோவை: விஜயை வேடிக்கைப்பார்க்க கூட்டம் வந்திருக்கும் என கோவையில் அமைச்சர் அன்பில்மகேஷ் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய சொல்லியிருக்கிறார் என்றும் இது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும்
விரைவில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.

Advertisement

மத்திய அரசு தரவேண்டிய வரி குறித்து, நம்முடைய வரிப்பணத்தை தான் ஒன்றிய அரசிடம் கேட்கிறோம் என்றும்
பள்ளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்
ஆனால் கடந்த இரு வருடங்களாக சில கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள் என்றார்.

அதே சமயம் குழந்தைகள், ஆசிரியர்கள் பாதிக்க பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் சட்டப் போராட்டமும் நடத்தி வருகிறது என்றும் கூறினார். மத்திய கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து இது சம்பந்தமாக கேட்டும் இதுவரை நிதியை கொடுக்காமல் வஞ்சித்து வருகின்றனர் என்றார்.

தவெக விஜய் திருச்சியில் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, இதுவரை தொலைக்காட்சி பார்க்கவில்லை என்றும்
கூட்டம் என்பது அதிக அளவில் வந்திருக்கும் என சொன்னார்கள். அதை பார்த்துவிட்டு எனது கருத்தை சொல்கிறேன் என்றார்.
கூட்டம் என்பது விஜயை வேடிக்கை பார்க்க வருகிறார்கள் அந்த தம்பிகள் வீட்டில் அரசின் பயனாளிகள் இருப்பார்கள் என்றார்.

தமிழ் புதல்வன் மூலமாகவோ, மகளிர் உதவி தொகை மூலமாகவோ, காலை உணவு திட்டம் மூலமாக அவர்கள் குடும்பத்தினர் பயனடைந்து இருப்பார்கள் என்றார். எல்லோருக்கும் எல்லாம் என்பதை திராவிட மடல் அரசு செய்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை விருந்தீஸ்வரர் கோவில் திருவீதி உலா அன்னதானம்…

கோவை: வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் பிரதோசம் விழா சுவாமி திருவீதி உலா அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோசம் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில்...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...