கோவையில் நடைபெற உள்ள உண்மையை மறைக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்- முற்போக்கு இயக்கங்கள் மனு…

கோவை: சிந்து வெளி நாகரிகம் என்பதை மறைத்து சிந்து சரஸ்வதி நாகரிகம் என்ற பெயரில் தனியார் கல்லூரியில் நடத்தப்பட உள்ள கருத்தரங்கிற்கு தடை விதிக்க வேண்டும் என முற்போக்கு இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் தனியார் கல்லூரியில் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு தேதிகளில் சிந்து சரஸ்வதி நாகரிகம் என்ற தலைப்பில் வரலாற்று கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிலையில் சிந்து சமவெளி நாகரிகம் என்பதை மறைத்து சிந்து சரஸ்வதி நாகரிகம் என்ற பெயரில் தென்னிந்திய ஆய்வு மையம் மற்றும் அந்த தனியார் கல்லூரி நடத்துவதாகவும் இது உண்மையை மறைக்கும் செயல் என்றும் குற்றம் சாட்டியுள்ள முற்போக்கு இயக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். உடனடியாக கல்வித்துறை மாவட்ட நிர்வாகம் ஆகியவை இதில் தலையிட்டு அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் சிந்து வெளி நாகரிகமே முதன்மையானது, அது கண்டறிந்து நூற்றாண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதனை கண்டுபிடித்த ஜான் மார்க்சல் தொல்லியல் ஆய்வாளருக்கு முதல்வர் சார்பில் சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில் உண்மையை மறைக்கும் நோக்காக அந்த கருத்தரங்கு நடத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.

Advertisement

மேலும் கல்லூரியில் இல்லாத ஒரு தலைப்பில் அந்த நிகழ்ச்சி நடைபெறுவதாகவும் எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் கல்வித்துறை அதிகாரிகள் இதில் தலையிட்ட அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் வருகின்ற 11ஆம் தேதி அந்த கல்லூரியை அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் முற்றுகையிட உள்ளதாக தெரிவித்தார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை அரசு மருத்துவமனை செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நடைபெற்ற இந்த...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...