அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி? கோவையில் அண்ணாமலை பேட்டி

கோவை: கோவையில் அண்ணாமலை செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதனை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்கள்-அண்ணாமலை இடையேயான கலந்துரையாடல் பின்வருமாறு:-

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத் திருமணத்தில் விழாவில் கலந்து கொண்டீர்களே? அழைப்பு வந்ததா?

Advertisement

அண்ணாமலை:

எஸ்.பி.வேலுமணி வீட்டில் திருமணத்திற்கு அழைத்து இருந்தார்கள். அதனால். சென்றிருந்தேன்.

Advertisement

அமித்ஷா கோவை வந்து சென்ற பின்னர் தான் அரசியல் மாற்றங்கள் ஏற்படுகிறதா?

அண்ணாமலை:

அமித்ஷா இரண்டு நாட்களில் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருகிறார். அதன் பின்னர் எத்தனையோ மாற்றங்கள் வரப்போகிறது.

எஸ்.பி.வேலுமணி இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவில்லை. பிரச்சனையா?

அண்ணாமலை:

சென்னை போய்விட்டு நாளை மாலை 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். இது அவசரத்தில் பேசும் சப்ஜெக்ட் அல்ல, பொறுமையாகப் பேசுகிறேன்.

பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. கூட்டணி அமையுமா?

அண்ணாமலை:

எடப்பாடி பழனிச்சாமி ரிசப்ஷனுக்கு வருவார் என நினைக்கிறேன்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நாளை புரட்டாசியின் அபூர்வ பவுர்ணமி… குடும்பத்தில் நிம்மதி இல்லையா? இதை செய்யத் தவறாதீர்கள்…!!

கோவை: நாளை (செப்டம்பர் 26) புரட்டாசி மாதத்தின் 2வது சனிக்கிழமை மிகவும் விஷேசமானது என்பதோடு, அபூர்வ பவுர்ணமியும் கூடவே வருகிறது. இந்த நன்னாளில் பெண்கள் வீடுகளில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் குறித்து...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...