கோவை: கோவையில் Defence Expo துவங்கியுள்ளது.
வெடிப்பொருள் துறையில் நவீன கண்டுபிடிப்புகள் AI தொழில் நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து கோவையில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது.
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரி அரங்கில் பாதுகாப்பு துறை நிறுவனங்கள், பட்டாசு உற்பத்தியாளர்களின் ஒருங்கிணைந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்வுகள் துவங்கி உள்ளது.
இரண்டு தினங்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் பாதுகாப்பு துறை சம்பந்தமான கண்காட்சி அரங்குகள் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்பு நிறுவனங்கள் AI தொழில்நுட்ப நிறுவனங்கள் அவர்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி உள்ளனர்.

இந்த நிகழ்வில் பட்டாசு உற்பத்தியை பாதுகாப்பாகவும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையிலும் நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படுத்துவது குறித்து பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டது.
மேலும் பாதுகாப்புத் துறையில் AI தொழில்நுட்பத்தின் பங்கீடு, நவீன கால கண்டுபிடிப்புகள் அதில் என்னென்ன புதிய விஷயங்களை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் பல்வேறு கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டன.





