கோவை: அரசன் திரைப்படத்தில் சிம்புவிற்கு அம்மா நான் கிடையாது தவறான தகவல்கள் பரவி வருவதற்கு நடிகை ஆண்ட்ரியா முற்றுப்புள்ளி.
வடசென்னை படத்தின் தொடர்ச்சி தான் அரசன் என்றும் சிம்புவின் அம்மாவாக நான் நடிக்கவில்லை என்றும் நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
சுதந்திரத்திற்கு முன்பு இருந்து இந்த கடை செயல்பட்டு வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்றும் நகைகள் அழகாக இருக்க வேண்டும் குறைந்த எடையில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் பெண்களுக்கு பிடிக்கும் என்று தெரிவித்தார்.
நகை விலை உயர்வுக்கு என் கையில் எதுவும் கிடையாது நான் என்ன செய்வது என்ற அவர் தங்கம் விலை உயர்ந்தாலும் குறைந்த விலையில் உள்ள தங்க நகைகளை மக்கள் வாங்க தான் செய்கிறார்கள் என்றும் வைர நகைகளையும் மக்கள் வாங்குவதாக தெரிவித்தார்.
திரைப்படம் குறித்தான கேள்விக்கு அரசன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற வருவதாகவும் கூறிய அவர் அந்த படத்தில் சிம்புவிற்கு அம்மாவாக நான் நடிக்கவில்லை ஆனால் தவறுதலாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். தனுஷின் வடசென்னை படத்தின் தொடர்ச்சி தான் அரசன் திரைப்படம் என்றும் அதில் நான் சந்திராவாகத்தான் நடித்து வருவதாகவும் சிம்பு விற்கு அம்மா கிடையாது என்று உறுதிப்பட தெரிவித்தார்.





