7 தலைமுறை வாரிசுகளுடன் நூறாவது பிறந்த நாளை கொண்டாடிய கோவை பாட்டி…

கோவை: கோவையில் 7 தலைமுறைகளைக் கண்ட இரத்தினம்மாள் பாட்டி 100 வது பிறந்த நாளை வாரிசுகளுடன் கொண்டாடினார்.

Advertisement

கோவையில் 7 தலைமுறைகளைக் கண்ட இரத்தினம்மாள் பாட்டி தனது 100 வது பிறந்த நாளை உறவினர்களுடன் கொண்டாடினார். மகன், மகள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன், பேத்திகள், எல்லுப் பேரன், பேத்திகள் என அவருடைய வாரிசுகள், உறவினர்கள் அனைவரும் பரிசுகள் வழங்கி இரத்தினம்மாளின் கால்களில் விழுந்து ஆசி பெற்றனர்.

கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் இரத்தினம்மாள். 1926ம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 100 வயது ஆகிறது. இவருக்கும் கிருஷ்ணசாமி கவுண்டர் என்பவருக்கும் திருமணம் ஆகி 4 குழந்தைகள், 7 பேரன், பேத்திகள், 8 கொள்ளு பேரன், பேத்திகள், ஒரு எள்ளு பேரன் ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில் தனது 100 வது பிறந்தநாளை அவரது வாரிசுகள் உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினரை அழைத்து விழாவாக கொண்டாடினர். இதில் கலந்து கொண்ட அவரது வாரிசுகளான மகன், மகள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன், பேத்திகள், எல்லுப் பேரன், பேத்திகள் மற்றும் உறவினர்கள் வாழ்த்தியதோடு பரிசுகள் வழங்கி அவரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றனர்.

Advertisement

இவ்விழாவில் அவரது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக உருவாக்கி அனைவருக்கும் வழங்கினர். மேலும் கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பாஜக திமுக இணைகிறதா?- வானதி சீனிவாசன் அளித்த பதில்…

கோவை: அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். கோவையில் தேசிய கைத்தறி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பா.ஜ.க தேசிய மகளிர் அணி...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.