அவசரமாக ஏறிய அண்ணாமலை… பல்பு கொடுத்த வாகன ஓட்டி…! வீடியோ

கோவை: கோவையில் சாலையோரம் நின்ற பைக்கில் ஏறி பயணிக்க முயன்ற அண்ணாமலையிடம், நான் அங்கு போகவில்லை அண்ணா என்று வாகன ஓட்டி ஒருவர் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று அரசினர் பொறியியல் கல்லூரி அருகே உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இதற்காக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் வந்திருந்தார். அப்போது தேர்தல் அலுவலகத்தின் 100 மீட்டருக்கு முன்பு அண்ணாமலையின் கார் தடுத்து நிறுத்தப்பட்டது.

அப்போது அங்கிருந்து பரபரப்பாக நடந்து வந்த அண்ணாமலை, உடனடியாக அருகில் சாலையோரம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவரின் பைக்கில் ஏற முயன்றார்.

Advertisement

அப்போது அந்த நபர், நான் அங்க போகல அண்ணா என்று தெரிவிக்க, ஓ நீங்க அங்க போகலையா என்று சமாளித்தபடி, அருகில் நின்ற மற்றொருவரின் வாகனத்தில் ஏறி பயணித்தார்.

இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Flipkart Link 1
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

அரசு பள்ளி பயின்று முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்த மாணாக்கர்கள்- நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர்…

கோவை: அரசுப் பள்ளியில் பயின்று நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள மாணாக்கர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அழைத்து பாராட்டினார். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசுப் பள்ளியில் பயின்று நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில்...

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...