கோவையில் சிறுவர்களுக்கான கலைப் போட்டிகள் நடைபெற உள்ளது…

கோவை: கோவையில் சவகர் சிறுவர் மன்றத்தின் கலைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

Advertisement

கலை பண்பாட்டுத்துறையின் கோயம்புத்தூர் மண்டலம் சார்பாக கோயம்புத்தூர் சவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் (குரலிசை, பரத நாட்டியம் ஓவியம் கிராமிய நடனம்) 01.08.2026 அன்று காலை 10.00 மணி முதல் கோயம்புத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டி அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் 5-8,9-12,13-16 ஆகிய வயதுப் பிரிவில் மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய கலைகளில் போட்டிகள் நடத்திவுடம் இக்கலை போட்டிகளில் முதலிடம். இரண்டாமிடம், மூன்றாமிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். மேலும் இப்போட்டிகளில் 9-12 13-19 ஆகிய வயதுப் பிரிவுகளில் முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவிலான கலைப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

பரதநாட்டியம்- (செவ்வியல் கலை)
பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம் முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும்திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசைப்பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் நீங்கலாக) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதி இல்லை பக்க வாத்தியங்களையோ ஒலி நாடாக்களையோ பயன்படுத்தி கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் அதிக பட்சம் 5 நிமிடங்கள் நடனமாட அனுமதிக்கப்படும்

Advertisement

கிராமிய நடனம்- (நாட்டுப்புறக் கலை)
தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமியக் கலை நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பணை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும்திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசைப்பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் நீங்கலாக) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதி இல்லை. பக்க வாத்தியங்களையோ ஒலி நாடாக்களையோ பயன்படுத்தி கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் அதிக பட்சம் 5 நிமிடங்கள் நடனமாட அனுமதிக்கப்படும்

குரலிசை போட்டி-
கர்நாடக இசை தேசிய பாடல்கள், சமூக விழிப்புணர்வு பாடல்கள். நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவற்றில் தமிழ்பாடல்கள் மட்டுமே பாட வேண்டும் பக்க வாத்திய கருவிகளை பாடுபவர்கள் மட்டும் பயன் படுத்தி கொள்ளலாம். மேற்கத்திய இசை திரை இசை பாடல்கள், குழுபாடல்கள் அனுமதி இல்லை அதிக பட்சம் 5 நிமிடங்கள் பாடலாம் ஒலி பதிவினை பயன்படுத்தக்கூடாது

Advertisement

ஓவியப்போட்டி-
இத்துறையால் வழங்கப்படும் ஓவியத்தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான் வண்ணங்கள்போஸ்டர் கலர், வாட்டர் கலர்பெயின்டிங் என எவ்வகையிலும் ஒவியங்களும் அமையலாம்ஓவியத்தால் வண்ணங்கள் தூரிகைகள் உள்பட்ட தங்களுக்கு தேவையானவற்றை போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும்குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதி இல்லை. ஒவ்வொரு வயது பிரிவுக்கும் தனித்தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்

கடந்த ஆண்டுகளில் இப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் பங்கேற்க அனுமதி. இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5-8, 9-12, 13-16 ஆகிய வயதுப்பிரிவுகளில் உள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டை நகல்வயது சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்பு சான்றிதழ்களுடன் கோயம்புத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டி அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் 01.08.2026 அன்று காலை 10.30 மணிக்குள் போட்டியில் பங்கேற்க பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு கோயம்புத்தூர் மாவட்ட சவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை (9751528188) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

“Run for a Drug-Free Coimbatore” – போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தானை அறிவித்த கோவை காவல்துறை

போதை இல்லா கோவை என்ற இலக்குடன் கோவை மாவட்ட காவல்துறை ஆகஸ்ட் 8-ம் தேதி இலவச மாரத்தான் போட்டியை நடத்துகிறது.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...