கைவினைஞர்கள் தனித்தேர்வு- விண்ணப்பங்கள் வரவேற்பு…

கோவை: கைவினைஞர் தனித்தேர்வு குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

2027 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முழு தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்ப படிவம். விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு (Prospectus) மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

தேர்வு கட்டணத்தை (ரூ.200/- ரூபாய் இருநூறு மட்டும்) www.karuvoolam.tn.gov.in என்ற என்ற இணைய தளத்தின் வழியாக e-Challan மூலம் செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் விளக்க குறிப்பில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலைய (Nodal Govt. ITI) முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, முதனிலைத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு (Theory) 26.11.2026 அன்று கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் செய்முறை தேர்வு 27.11.2026 அன்று நடைபெறும்.

இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வராக தேர்வு எழுத 21.09.2026 விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்க கடைசி தேதி 09.10.2026 ஆகும்.

Advertisement

அதற்கு பிறகு பெறப்படும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...