‘ராக்கா’ படத்தில் உச்ச நடிகரின் ‘என்ட்ரி… சஸ்பென்சை உடைக்கும அட்லீ!

அல்லு அர்ஜூனை வைத்து அட்லீ இயக்கும் படத்தில் உச்ச நடிகர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குநர் அட்லீ, முதல் படத்திலேயே முத்திரையை பதித்தார்.

தொடர்ந்து, தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் இணைந்து ஹாட்ரிக் மெகா வெற்றியையும் பதிவு செய்து, ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் ஈர்த்தார்.

Advertisement
Atlee Vijay

அட்லீ எடுக்கும் படங்கள், மற்ற படங்களின் தழுவல்தான் என பரவலாக கூறப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து மெகா ஹிட் ஆகிவிடும்.

2019க்கு பின்னர் சில காலம் இடைவெளி எடுத்த அட்லீ, 2023ல் பாலிவுட்டுக்கு சென்று ஜவான் படத்தை இயக்கினார். ஷாருக்கான் நடித்து வெளியான படம் மரண ஹிட் அடித்தது. மேலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியதால் பாலிவுட்டில் பேசப்பட்டு வரும் இயக்குநரானார்.

Atkee Shah

இதனால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. உடனே தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தெறி படத்தை இந்தியில் எடுத்தார். ஆனால் பேபி ஜான் படம் அங்கு படுதோல்வியடைந்தது.

ஆனால் இவரது அடுத்த இயக்கம் யாருடன் என்ற எதிர்பார்பபு எகிறியது. அப்போது வெளியான ஓர் அறிவிப்பு இந்திய அளவில் டிரெண்டாது.

AA22 என்ற அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக வெளியானது. அதாவது அல்லு அர்ஜீன் நடிப்பில் 22வது படத்தை அட்லீ இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

Raaka Atlee

பெரும் பொருட்செலவில் படம் தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படம் தனது கனவு படம் என கூறியிருந்தார் அட்லீ.

அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய திரைப்படமான ராக்கா படத்தின் First Look மற்றும் Title Poster சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. வெளியான உடனே, இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Raaj

இந்த படத்தை Sun Pictures நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இசையை சாய் அப்யங்கர் அமைக்கிறார். ஆக்ஷன் மற்றும் காட்சியமைப்பில் வித்தியாசமாக உருவாகி வரும் இந்த படத்தில், தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோர் இப்படத்தில் இணைகிறார்கள் என்ற தகவலும் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

இந்நிலையில், படத்தை சுற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கேமியோ தோற்றத்தில் வருவார் என தகவல் பரவி வருகிறது. இயக்குனர் அட்லீயுடன் ஏற்கனவே ஜவான் படத்தில் இணைந்திருந்த ஷாருக்கான், மீண்டும் ‘ராக்கா’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆனால், இந்த தகவல் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாததால், இது வதந்தியா அல்லது உண்மையா என்பது தெளிவாக தெரியவில்லை.

Shah rukh khan in Raaja

இருப்பினும், இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், ஷாருக்கானின் என்ட்ரி காட்சிகள் ரசிகர்களுக்கு சிறப்பு அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சமீபத்தில் வெளியான தகவலின்படி, ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருந்த ஷாருக்கான், தனது ‘கிங்’ படத்திற்கான லுக் மாற்றம் சாத்தியமில்லை என்பதால் அந்த வாய்ப்பை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

King Shah rukh

இதனால், ‘ராக்கா’ படத்தில் அவர் தோன்றுவாரா என்பது ரசிகர்களிடையே பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

உன்னை செருப்பாலயே அடிப்பேன்.. திவாகரை ஒருமையில் திட்டிய பிரபலம்!

சாதி பற்றி பேசினால் செருப்பால் அடிப்பேன் என வாட்டர் மிலன் ஸ்டார் திவாகரை கடுமையாக சாடியுள்ளார் நடிகர் கூல் சுரேஷ். Water Melon Star திவாகர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் திவாகர். இவர் ஒரு...

Video