“ஜனநாயகன்” படம் சட்டவிரோத வெளியீடு – கோவையில் சேனல் உரிமையாளர் கைது

கோவை: தணிக்கை சான்று பெறாமல் “ஜனநாயகன்” திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்ட வழக்கில் உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் “ராசி பிரைம் மூவி” என்ற உள்ளூர் சேனலின் நிறுவனர், கடந்த 11.04.2026 அன்று மத்திய தணிக்கை சான்று பெறாமல், நிலுவையில் இருந்து வரும் “ஜனநாயகன்” திரைப்படத்தை சட்டத்திற்கு புறம்பாக வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த கோவை புறநகர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் திருமதி மோகனப்பிரியா அளித்த புகாரின் அடிப்படையில், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே. கார்த்திகேயன் உத்தரவின்படி, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

விசாரணையில், மத்திய தணிக்கை குழுவின் சான்றுக்கு காத்திருக்கும் “ஜனநாயகன்” திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக பகிரப்பட்ட லிங்க் மூலம் “ராசி பிரைம் மூவி” உள்ளூர் சேனலில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கருமத்தம்பட்டி சோமனூர் மெயின் ரோடு ராம் நகர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (44) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Advertisement

மேலும், குற்றச்செயலில் பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்ட கம்ப்யூட்டர், 5 ஹார்ட் டிஸ்க்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சட்டத்திற்கு புறம்பாக திரைப்படங்களை வெளியிட்டதாக “ராசி டிவி” சேனலின் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, இணையத்தின் மூலம் திரைப்படங்கள் மற்றும் பதிப்புரிமை கொண்ட உள்ளடக்கங்களை சட்டவிரோதமாக பகிர்வு செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காவல்துறை உதவி எண்களுக்கோ தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...