கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு…

கோவை: கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதிய திட்டம் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

மத்திய அரசின் அடல் ஓய்வூதிய திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள கிராண்ட் ரீகன்ட் ஹாலில் இன்று நடைபெற்றது.

மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் அடல் ஓய்வூதிய திட்டம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

இத்திட்டத்தின் முக்கிய நன்மைகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் பங்களிப்பு தொகைக்கான பலன்கள் குறித்து வங்கி அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.

Advertisement

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கனரா வங்கியின் கோயம்புத்தூர் மண்டல தலைமை அதிகாரி – துணை பொது மேலாளர் கே.ஆர்.சைலஜா, நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் முகமது உசேன், Pension fund regulatory and development Authorityயின் அதிகாரிகள் பிரவேஷ்குமார் மற்றும் அஜய்குமார் பொடிசெட்டி ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தின் நன்மைகள் குறித்து விளக்கினர்.

இதனை தொடர்ந்து ஆடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Advertisement

நிகழ்ச்சியின் நிறைவாக கோயம்புத்தூர் மாவட்டம் முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் வங்கி அதிகாரிகள், அடல் ஓய்வு திட்ட பயனாளிகள் மற்றும் முதியோர் நல சங்கத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...