மக்கள் தொகை கணக்கெடுப்பு- ஆன்லைன் பதிவில் கோவை முதலிடம்…

கோவை: ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

Advertisement

தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. வீட்டு வசதிகள் குறித்து சுய கணக்கெடுப்பு ஜூலை 17 ம் தேதி முதல் ஜூலை 31 வரை நடைபெற்றது.

இந்த சுய கணக்கெடுப்பு பணி என்பது
ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.
மக்கள் தாங்களாகவே விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த கணக்கெடுப்பின் கீழ் வீடுகளின் நிலை, குடிநீர் வசதி, மின்சாரம், சமையல் எரிபொருள் உட்பட 33 கேள்விகள் மூலம் விவரங்கள் பதிவு செய்யப்பட்டது.

Advertisement

ஜூலை 31 நேற்றுடன் ஆன்லைன் சுய கணக்கெடுப்பு பணி நிறைவடைந்த நிலையில், கோவை மாவட்டத்தில் 118204
பேர் ஆன்லைன் மூலம் விவரங்களை பதிவு செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் 62950 பேர் சுயகணக்கெடுப்பு பணியில் விபரங்களை பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் சேர்த்து 1011219 பேர் சுயகணக்கெடுப்பின் கீழ் தங்களது தகவல்களை பதிவு செய்துள்ள நிலையில் ஆன்லைன் சுயகணக்கெடுப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிப்பு…

கோவை: பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமை அலுவலரின் அறிவிப்பின்படி, 01.01.2000-க்கு முன்னும் பின்னும் பதிவு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...